என் சாதனையை உடைக்க.. சேவாக் கெயில்னால முடியல.. இந்த 2 இந்திய பேட்டர்ஸ் பண்ணுவாங்கனு நம்புறேன்- லாரா பேட்டி

0
2801

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா என்றால் உடனடியாக முதலில் நினைவுக்கு வருவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 400 ரன்கள்தான்.

அவரது சாதனையை இன்றைய கால நவீன கிரிக்கெட்டில் இந்த இரண்டு இந்திய பேட்ஸ்மேன்களால் உடைக்க முடியும் என்று நம்புகிறார்.

- Advertisement -

2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய லாரா அப்படி ஒரு சாதனையைப் படைப்பார் என்று யாரும் அவ்வளவு எளிதில் நம்பி இருக்க மாட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்யும்போது முதல் 80 ரன்கள் இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில் அதற்குப் பின்னர் களம் இறங்கிய லாரா 582 பந்துகளை எதிர்கொண்டு 43 பௌண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 400 ரன்கள் விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 751 ரன்கள் குவிக்க, போட்டி டிரா ஆனது.

ஆனால் அதற்குப் பிறகு கெயில் மற்றும் சேவாக் ஆகியோர் 300 ரன்களைக் கடந்தாலும் அவரது சாதனையை இன்னும் யாரால் தொடக் கூட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் லாரா இன்றைய நவீன கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரர்களான இந்தியாவின் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தனது 400 ரன்கள் சாதனையை முறியடிப்பார்கள் என்று நம்புகிறார்.

இது குறித்து லாரா விரிவாக கூறும் பொழுது ” 1970 மற்றும் 80களில் கார்டன் க்ரீனிட்ஜ் மற்றும் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் கிரிக்கெட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது சர் கார்பீல்ட் சோபர்ஸின் சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது எனக்கு இப்போது வரை புதிதாக இருக்க கூடிய ஒரே விஷயம். எனது காலத்தில் வீரேந்திர சேவாக், கெயில் ஜெயசூர்யா, இன்சமாம் உல்ஹாக் போன்ற மகத்தான வீரர்கள் இருந்தபோதிலும் அவர்கள் 300 ரன்கள் கடந்த வீரர்களாக இருந்தனர்.

- Advertisement -

ஆனால் அவர்களால் 400 ரன்கள் சாதனை உடைக்கப்படவில்லை. இன்று எத்தனை கிரிக்கெட் வீரர்கள் ஆக்ரோஷமான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் தற்போது அதிரடியாக விளையாடுகிறார்கள். ஒருவேளை இந்திய அணியை எடுத்துக் கொண்டால் குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கில் இவர்கள் இருவரும் சரியான சூழ்நிலையை கணக்கிட்டு விளையாடினால் எனது சாதனை முறியடிக்க வாய்ப்புகள் உண்டு” என்று லாரா கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:214 ரன்ஸ்.. 18.3 ஓவர்.. தென் ஆப்பிரிக்கா அதிரடி சேஸ்.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி தோல்வி

2004 ஆம் ஆண்டு லாரா நிகழ்த்திய இப்படி ஒரு சாதனை அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்தும் இன்னும் ஒருவரால் கூட அவரது சாதனையை எட்ட முடியவில்லை. இனிவரும் எதிர்காலத்தில் அதிரடியாக விளையாடும் வீரர்களில் குறிப்பாக இந்திய அணியில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரால் தனது சாதனையை முறியடிக்க முடியும் என்று நம்புகிறார்.