ராகுல் டிராவிட் விலகுகிறார்?.. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?.. வெளியாகி இருக்கும் தகவல்கள்!

0
1356
Dravid

தற்போது இந்திய அணிக்கு மூன்று வடிவத்திலும் இந்திய லெஜன்ட் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவருடைய பதவிக்காலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது.

அவர் மேற்கொண்டு இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா? என்பது குறித்து தற்பொழுது வரை கேள்விகள் நிலவி வருகிறது.

- Advertisement -

ஏனென்றால் ராகுல் டிராவிட் ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலியின் வற்புறுத்தலில் ராகுல் டிராவிட் சம்மதித்தார்.

மேலும் ராகுல் டிராவிட் 20 ஆண்டு காலத்திற்குப் பக்கம் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். தற்பொழுது 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இரண்டு ஆண்டு காலம் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். எனவே அவருடைய வாழ்வின் பெரும் பகுதி கிரிக்கெட் சுற்றுப்பயணங்களில் கழிந்திருக்கிறது.

இதன் காரணமாக அவர் தனது சொந்த ஊரான பெங்களூரில் தங்க விருப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் அவர் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தெரிகிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தற்போது இந்திய அணிக்கு தற்காலிகமான பயிற்சியாளராக அவ்வப்பொழுது வந்து செல்லும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணிக்கு முழு நேர பயிற்சியாளராக தொடர விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு பயிற்சியாளராக செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டிஓஐ செய்திகளில் “லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் இதற்காக பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பதற்காக அகமதாபாத் சென்றார். அவரை அடுத்த பயிற்சியாளராக வந்து அடுத்த மாதம் இந்திய அணி உடன் தென் ஆப்பிரிக்கா செல்வார்.

அதே சமயத்தில் முழு நேர பயிற்சியாளராக இருப்பதற்கு ராகுல் டிராவிட் விரும்பவில்லை. அவர் தனது சொந்த ஊரான பெங்களூரில் தங்கி தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பு வகிக்க விரும்புகிறார்!” என்று கூறப்பட்டு இருக்கிறது!