அந்த பையனுக்குள்ள எதோ ஒன்னு இருக்கு – ராகுல் டிராவிட்டை ஈர்த்த இலங்கை வீரர்

0
3868
Sri Lanka Cricket

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி வரை சென்று பின்னர் வெற்றிக்கு திரும்பியது இலங்கை அணி சிறப்பாக பந்து வீசினாலும் இந்தியா நீ அதைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளது.என்று தான் குறிப்பிட வேண்டும். ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் கையே ஓங்கியது 193/7 என்ற நிலையில் இலங்கை அணி வெற்றி கிட்ட தட்ட உறுதி செய்யப்பட்டதாக கருதியது.

பின்னர் தீபக் சஹர் மற்றும் புவனேஷ்வர்குமார் மேஜிக்கினால் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது என்பது நாம் அறிந்ததே . இப்போட்டியில் இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா பந்து வீச்சு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை வெகுவாக ஈர்த்துள்ளது.

தற்போது நடந்து வரும் இந்தியா இலங்கை தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய இவர் 17 ஓவர்கள் வீசி 107 ரன்களை கொடுத்துள்ளார் ஆனால் இதுவரை ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. ஏற்கனவே இலங்கை பயிற்சியாளர் இலங்கை வீரர்கள் மீது காட்டமாக உள்ளார் . மூன்றாவது ஒருநாள் போட்டியில் அணியில் யாரெல்லாம் இருப்பாகள் இரண்டாம் போட்டிக்கு பிறகு அணியில் நிச்சயம் பல மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ராகுல் டிராவிட்டை ஈர்த்த இலங்கை வீரர்

Dushmantha Chameera Sri Lanka

இந்நிலையில் இலங்கை வீரர் துஷ்மந்த சமீரா பந்துவீச்சு ராகுல் டிராவிட்டின் மிகவும் கவர்ந்துள்ளது. இத்தொடரில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் அவர் வீசுகிற லைன் மேன் லென்த் மிகக் கச்சிதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் . ஒரு வீரரின் பலம் பலவீனம் திறமைகள் இவை அனைத்தும் அலசி ஆராய்ந்த பிறகே ராகுல் டிராவிட் வீரரைப்பற்றி தனது கருத்துகளை தெரிவிப்பார் . இந்நிலையில் இலங்கை வீரர் துஷ்மந்த சமீரா பந்துவீச்சு ராகுல் டிராவிட்டை வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளது என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது .

துஷ்மந்த சமீரா இதுவரை 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சராசரி 36 என்ற கணக்கிலும் 11 போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும் 25 டி-20 போட்டிகளில் 26 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் . தங்க உண்டியல தகர டப்பானு நினச்சுகிட்டு இருக்காங்க என்ற வசனம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.