இந்திய கிரிக்கெட்

உங்க பயோபிக் படத்தில்.. யார் ஹீரோவாக நடிக்க வேண்டும்? – டிராவிட் சொன்ன மாஸ் பதில்

நேற்று நடைபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய லெஜெண்ட் ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவரிடம் அவருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் யார் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது தற்காலத்தில் நிறைய நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றது.

தோனி காட்டிய வழி

மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு மிகச் சிறப்பான திரைக்கதை எழுதப்பட்டு, ஒரு முழு நேர திரைப்படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் கொண்டு எடுக்கப்பட்டது. உதாரணமாக அந்த திரைப்படம் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு இல்லை என்றால் கூட, கற்பனை கதையாக இருந்திருந்தாலும் வெற்றி பெறும் அளவுக்கு திரைக்கதை எழுதப்பட்டு இயக்கப்பட்டு இருந்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றி அடுத்தடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கானஆர்வத்தை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில்தேவ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியில் வந்தன.

- Advertisement -

இறுதியாக யுவராஜ் சிங்

இந்த நிலையில் இறுதியாக யுவராஜ் சிங்கும் தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்திய அணியின் மகத்தான வெற்றிகளில் பங்காற்றி உள்ள அவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியில் வந்தாலும் அது பல இளைஞர்களுக்கு மிகவும் ஊக்கமாக அமையும்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. முழு அட்டவணை வெளியீடு.. 2025 WTC தொடரின் அதிரடி ஆரம்பம்

இதுபோல நேற்றைய நிகழ்வில் ராகுல் டிராவிட்டிடம் அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் யார் கதாநாயகனாக நடிக்க வேண்டும்? என்கின்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் நகைச்சுவையாக “நல்ல சம்பளம் கொடுப்பதாக இருந்தால், என் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நானே கதாநாயகனாக நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். பதில் நகைச்சுவையாக இருந்தாலும் கூட அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று தெரிய வருகிறது.

- Advertisement -
Published by
Tags: Rahul Dravid

Recent Posts