இந்திய கிரிக்கெட்

விராட் பிரச்சனையே வேற.. குறைவா நினைக்காதிங்க.. இதனால மாஸ் பண்ண போறாரு – ஆஸிக்கு டிராவிட் மறைமுக எச்சரிக்கை

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விராட் கோலிக்கு சிறப்பானதாக அமையும் என தான் நினைப்பதாக அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில காரணத்துடன் விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான முறையில் திரும்பி வந்து சதம் அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். மேலும் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து 30 டெஸ்ட் சதங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஏற்ற இறக்கங்களில் விராட் கோலி

2023 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான முறையில் விளையாடிய விராட் கோலி 200க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து தொடர் நாயகனாக வந்தார். அந்தத் தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சச்சின் சாதனையையும் முறியடித்தார்.

ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய ஆட்டங்கள் எதுவும் அமையவில்லை. சீரான முறையில் அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை. மீண்டும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றார். அடுத்து இந்தியாவில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு சரியாக செல்லவில்லை. இப்படி திடீர் ஏற்றவும் பெரிய இறக்கமும் கொண்டதாகவே அவருடைய பேட்டிங் இருந்து வருகிறது.

- Advertisement -

விராட் கோலி இதை செய்வார்

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பேசி இருக்கும் ராகுல் டிராவிட் கூறும் பொழுது “விராட் கோலி வெளிநாட்டு ஆடுகளங்களில் நன்றாகவே பேட்டிங் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் கூட பேட்டிங் செய்வதற்கு கடினமான இரண்டு ஆடுகளங்களில் அவர் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார்”

இதையும் படிங்க : இந்தியா 2வது டெஸ்ட்.. 5297 ரன் 148 விக்கெட்.. ஆஸி அணியில் புது வீரர் சேர்ப்பு.. யார் இவர் என்ன காரணம்?

“விராட் கோலி இந்த தொடரின் தொடக்கத்திலேயே சதம் அடித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக விளையாடக் கூடியவராக இருப்பதால், தற்போது சதமும் இந்த தொடரில் அடித்து இருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் விராட் கோலிக்கு பெரிய தொடராக அமையும் என நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts