இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு முக்கியமான வீரர் திடீரென சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதம் 6ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிராக பிங்க் நிறப் பந்தில் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்த மாதம் 30ஆம் தேதி விளையாடுகிறது.
புதிய ஆல் ரவுண்டர் சேர்ப்பு
இந்த நிலையில் பயிற்சி போட்டி மற்றும் இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி இரண்டுக்கும் ஆஸ்திரேலியா அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் ஆஸ்திரேலியா அணியில் திடீரென இணைக்கப்பட்டிருக்கிறார். இவர் இதுவரையில் 93 முதல் தர போட்டிகளில் விளையாடிய 5297 ரன்கள் மற்றும் 148 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
மேலும் இந்திய ஏ அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். எனவே தற்போது ஆஸ்திரேலியா அணி இவரை வைத்து வேறு விதமான திட்டங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியின் திட்டம்
ஆஸ்திரேலியா அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஸ் காயம் அடையக்கூடிய வீரராக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவரைக் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை மார்ஸ் நல்ல உடல் தகுதியுடன் இருந்து வருகிறார் என்றே தெரிகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் மார்ஸ் மற்றும் கிரீன் என இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் விளையாடி இருக்கிறார்கள். இதை கம்மின்ஸ் பெரிதும் விரும்புகிறார். தற்போது தொடக்க வீரரான நாதன் மெக்வீனி அல்லது ஃபார்ம் இல்லாமல் இருக்கும் லபுசேனை நீக்கிவிட்டு, மார்ஸ் மற்றும் வெப்ஸ்டர் இருவரையும் அணியில் விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிங்க : கம்பீரின் கனவு பிளான்.. சுனில் நரைன் போல தமிழகத்தில் பந்து வீசிய ஸ்ரேயாஸ் ஐயர்.. தொடரும் பரிசோதனை
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் வருவார்கள். எனவே வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை குறைக்க முடியும். அவர்களை புத்துணர்ச்சியோடு பந்து வீச்சுக்கு கொண்டு வந்து சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை நடத்த முடியும். எனவே ஆஸ்திரேலியா இந்த கோணத்தில் திட்டமிடுவதாகவும் பேசப்படுகிறது!






