77 பந்தில் 205 ரன்கள்.. டி20 போட்டியில் இரட்டை சதம் அடித்த விண்டீஸ் வீரர்!

0
37495

டி20 போட்டியில் அடுத்த புதிய வரலாறு படைத்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வால்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்களில் அட்லாண்டா ஃபயர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது.

- Advertisement -

போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரஹீம் கான்வால் எனும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் 77 பந்துகளில் 205 ரன்கள் அடித்தார். டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார். இவர் 22 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் அடித்து 266 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

மற்றொரு துவக்க வீரர் ஸ்டீபன் டைலர் 18 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சமி அஸ்லாம் 29 பந்துகளில் 53 ரன்கள் அடித்து இருந்தார். மேலும் டி20 போட்டிகளில் முதல் முறையாக 300 ரன்கள் கடந்த அணி என்ற பெருமையும் இந்த அணிக்கு கிடைத்திருக்கிறது.

அடுத்ததாக பேட்டிங் செய்த ஸ்கொயர் டிரைவ் அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் அட்லாண்டா ஃபயர் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

டி20 போட்டிகளில் சதம் அடிப்பதே மிகவும் அரிதான விஷயமாக இருந்து வரும் நிலையில் உள்ளூர் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இரட்டை சதம் அடித்திருப்பது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வந்த இவர், அதை முடித்துவிட்டு அட்லாண்டா ஃபயர் அணிக்காக விளையாடினார். வழக்கமாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் இவர் அதிரடியை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்துவார். தற்போது துவக்க வீரராக இறங்கி இரட்டை சதம் அடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்திருப்பதால் பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.