மீண்டும் இந்திய அணியில் ரகானே? வெளியான பரபரப்பு தகவல்!

0
306
Rahane

இந்திய கிரிக்கெட்டில் மும்பை பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் என்பது ஆதியில் இருந்து வரக்கூடியது. அவர்கள் திறமையான பேட்ஸ்மேன்களாகவும் இருப்பது, அவர்களது ஆதிக்கத்திற்கு முக்கியமான காரணம்!

இந்திய கிரிக்கெட்டில் மும்பை பேட்ஸ்மேன்களின் வருகையில் வலதுகை பேட்ஸ்மேன் ரகானேவும் மிக முக்கியமானவர். பந்தை பலம் கொண்டு அடிக்காமல் தொழில்நுட்பத்தின் மூலம் டைமிங்கில் அழகான ஷாட்கள் விளையாடக்கூடியவர்.

- Advertisement -

இந்திய அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள், 20 டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார். இந்திய அணிக்காக டெஸ்டில் 12 சதங்களும் ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று சதங்களும் அடித்திருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இன்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், புனே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தி இருக்கிறார்.

விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த பொழுது துணை கேப்டனாக இருந்த ரகானே பேட்டிங் ஃபார்ம் சரிவால் துணை கேப்டன் பொறுப்பை இழந்ததோடு, கடைசியாக இந்திய டெஸ்ட் அணியில் இடத்தையும் இழந்தார்.

- Advertisement -

கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட இவர், இந்த வருடம் அந்த அணியால் கழட்டி விடப்பட்டு சென்னை அணியால் அடிப்படை விலையான ஐம்பது லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதிய போட்டியில் மொயின் அலி மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் விளையாட முடியாத காரணத்தால் ரகானேவுக்கு வாய்ப்பை வழங்கியது. இந்த வாய்ப்பைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட ரகானே அந்தப் போட்டியில் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது இந்த அதிரடியான பேட்டிங்கில் அவரது பழைய டச் மீண்டும் வந்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்பொழுது மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஸ்ரேயாஸ் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால், அவரால் ஐபிஎல் முடிந்து ஜூன் மாதம் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியாது. எனவே அவரிடத்தில் மீண்டும் அனுபவ வீரரான ரகானே இடம் போக இந்தியத் தேர்வுக்குழு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ரகானே ” உலக டெத் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நிறைய நாட்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் என்னுடைய முயற்சியை எப்பொழுதும் கைவிட மாட்டேன். என்னை பொருத்தவரை மகிழ்ச்சியாக ஆர்வத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன்!” என்று கூறியிருக்கிறார்!