இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா தன் குறித்த விமர்சனங்களால் கொஞ்சம் பாதிக்கப்பட்டார் என ரகானே தெரிவித்திருக்கிறார்.
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் கடைசி நேரத்தில் மிக முக்கியமான 29 ரன்களை ஹர்ஷித் ராணா எடுத்தார். அவரது இந்த செயல்பாடு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் அவருடைய ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ரகானே அவர் குறித்து பேசி இருக்கிறார்.
கடந்த மாதங்களில் ஹர்ஷித்ராணா குறித்து சமூக வலைதளங்களில் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள். இதுகுறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் கடுமையான முறையில் பதிலடி கொடுத்து இருந்தார். இதனால் இந்த விஷயங்கள் மிகவும் சூடு பிடித்திருந்தது.
இது குறித்து ரகானே கூறும்பொழுது “நான் ஹர்ஷித் ராணாவிடம் அவர் மீதான விமர்சனங்கள் குறித்து கேட்டேன். அதற்கு அவர் அந்த விமர்சனங்களை எல்லாம் தான் பார்ப்பதாகவும், அது தன்னை அணிக்காக சிறப்பாக செயல்பட வைக்க உந்தி தள்ளுவதாகவும் கூறினார். அதே நேரத்தில் ஒரு சில விமர்சனங்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்”
“அவர் தனது செயல்பாட்டை கூர்மையாக்குவதற்காக இந்த விமர்சனங்களை எல்லாம் படித்தார். அதே சமயத்தில் அவர் பயிற்சி செய்யும் பொழுது காதில் ஏர்பாட்ஸ்களை மாட்டிக் கொள்வார். இதுதான் அவர் வெளியில் இருந்து வரும் சத்தத்தை குறைத்துக் கொள்வதற்கு செய்யும் அணுகுமுறை என்று நான் நினைத்தேன்”
இதையும் படிங்க : விராட் கோலி பாய் டெய்லியும் இதையெல்லாம் செய்வாரு.. பக்கத்திலேயே போக முடியாது – கில் வியப்பு
“அவர் ஏன் அப்படி செய்கிறார் என்று தெரிந்து கொள்ள நாங்கள் எல்லோரும் விரும்பினோம். அதன் வெளிப்புறத்தில் இருந்து சத்தத்தை குறைத்துக் கொள்ள இவ்வாறு செய்கிறார் என்று தெரிந்தது. பின்பு அவர் போட்டிகளிலும் அதே அமைதியான மனநிலையுடன் வந்து தீவிரமான முறையில் பந்துவீச அவர் விரும்புகிறார்” என்று கூறியிருக்கிறார்.