இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் ஐயர் ரூமுக்கு போய் இதை யோசித்து தான் ஆகணும்.. இதுல இருந்து அவர் தப்பிக்கவே முடியாது – கைஃப் பேச்சு

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பௌலிங் துறை மற்றும் ரிசர்வ் வீரர்களின் தரம் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணியில் அனுபவமிக்க முன்னணி பௌலர்கள் இல்லாத சூழ்நிலையில், இளம் பௌலர்களைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து அவர் விவரித்துள்ளார்.

- Advertisement -

​மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் போன்ற இளம் திறமைகள் அணியில் இருந்தாலும், அவர்களைத் தொடர்ந்து தக்கவைத்து வாய்ப்பளிப்பதில் போதிய பொறுமை காட்டப்படுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணியில் சரியான பேக்அப் பௌலர்கள் இல்லாத தற்போதைய சூழல் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கவலை கொள்ளக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

​இதுகுறித்து முகமது கைஃப் பேசும்போது “மயங்க் யாதவ் எதிர்காலத்தில் ஒரு நல்ல பௌலராக உருவெடுக்க முடியும், பிரின்ஸ் யாதவ் நல்ல திறமை கொண்ட பௌலர், அவரிடம் வேகமும் யார்க்கர் வீசும் திறனும் உள்ளது. ஆனால் இப்போதே அவர்களை மதிப்பிடுவது மிக அவசரம், தற்போதைய பிரச்சினை என்னவென்றால் இங்கு யாருக்கும் போதிய பொறுமை காட்டுவதில்லை, கண்டிப்பாக பொறுமை அவசியம். ஒரு புதிய பௌலரை அணிக்குள் கொண்டு வந்தால், அவரை தொடர்ந்து தக்கவைத்து வாய்ப்பளிக்க வேண்டும். தற்போது குல்தீப் யாதவுக்கு அப்படி தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுவதில்லை, அவர் ஒரு போட்டியில் விளையாடுகிறார், அடுத்த போட்டியில் டிராப் செய்யப்படுகிறார்” எனத் தெரிவித்து இருக்கிறார்.

​தொடர்ந்து அவர் பேசும்போது “நம்மால் சரியான பேக்அப் பௌலர்களை உருவாக்க முடியவில்லை, அப்படி பட்டியலிட்டால் அதிக பெயர்கள் கிடைக்காது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறைக்குத் திரும்பும்போது, ஹார்திக் பாண்டியா எப்போது வருவார், ஜஸ்பிரித் பும்ரா எப்போது திரும்புவார் என்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார். சமீபகாலமாக புதிய பௌலர்கள் உருவாக்கப்படாத நிலையில், புவனேஷ்வர் குமார் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது ஒரு நல்ல விஷயம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts