நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 91 பந்தில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அவர் தொடர்ந்து எப்படி ரன்கள் எடுத்து வருகிறார் என்பது குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் விராட் கோலி உள்ளே வந்ததிலிருந்து அதிரடியாக விளையாடினார். துவக்க ஆட்டக்காரராக வந்த கில்லுக்கு முன்பாகவே அரைத்ததத்தை அரை சதத்தை அடித்தார். மேலும் அவர் மீது இருந்த ரன் அழுத்தத்தை எடுத்து அவரையும் அரை சதம் அடிக்க வைத்தார்.
விராட் கோலி பேச்சு
நேற்று ஆட்டநாயகன் விருது வாங்கும் போது பேசியிருந்த விராட் கோலி தான் சாதனைகள் குறித்து யோசிப்பதில்லை எனவும், தற்போது அதிரடியாக விளையாடுவதை நோக்கமாக வைத்திருப்பதாகவும், முதலில் பேட்டிங் செய்வதாக இருந்திருந்தால் இதைவிட அதிரடியாக விளையாடியிருப்பேன் என்றும் கூறியிருந்தார்.
மேலும் தான் நினைத்ததற்கு அதிகமாகவே கடவுள் தனக்கு கிரிக்கெட்டில் கொடுத்து விட்டதாகவும், அதற்கு தான் மிகுந்த நன்றி உள்ளவனாக இருப்பதாகவும், ரசிகர்கள் தன்னை பார்க்க வருவது ஆசிர்வாதம் போல உணர்வதாகவும் மிகுந்த நிகழ்ச்சியோடு பல விஷயங்கள் குறித்து பேசி இருந்தார்.
கேப்டன் கில் பாராட்டு
விராட் கோலி குறித்து கில் பேசும் பொழுது ” அவர் எப்பொழுதும் சிறப்பாக செயல்படுவதற்கான ஒரே குறிக்கோளை வைத்துக்கொண்டு செயல்படும் தன்மை, அந்த பசி, தன்னுடைய உடலை எந்த எல்லைக்கும் தள்ளிக் கொண்டு செல்ல தயங்காத மனநிலை, இவற்றையெல்லாம் நான் அவருடன் அணியில் இருந்த போது பார்த்து வருகிறேன். அவருடைய சீரான கடின உழைப்பு இன்னும் மேலே சென்று கொண்டே இருக்கிறது”
இதையும் படிங்க : கேஎல் ராகுலின் அருமையை மக்கள் இப்போது புரிஞ்சுக்கணும்.. அவர் இப்படி பேட்டிங் செய்ய அதுதான் காரணம் – இர்பான் பதான்
“மேலும் வேலையை எப்படி செய்கிறார் என்பதையும் பார்த்து இருக்கிறேன். அவர் காலையில் வந்ததும் கேட்ச் பிடிப்பதற்கு பல பயிற்சிகளை செய்வார். மேலும் விக்கெட் கீப்பரிடம் சரியாக த்ரோ அடிக்கவும் பயிற்சிகள் மேற்கொள்வார். பேட்டிங் பயிற்சி என்று இல்லாமல் எல்லாவற்றையும் செய்வார். இதையெல்லாம் அவர் தன்னுடைய தினசரி நடவடிக்கையாகவே மாற்றி வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






