இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பந்து வீச்சாளர்கள் உணர முடியாத அளவுக்கு தாக்கத்தை எப்படி ஏற்படுத்துவார் என்பது குறித்து ரபாடா பேசியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டேவிட் வார்னர் இருவரும் எப்படியான பேட்ஸ்மேன்கள்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
தனித்துவமானவர்கள்
விராட் கோலி ரன்களை துரத்தும் பொழுது மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் ஆக இருந்திருக்கிறார். அவர் ஒரு இன்னிங்ஸை படிப்படியாக கட்டமைத்து எடுத்துக்கொண்டு சென்று, எதிரணி உணர்வதற்குள்ளாக வெற்றியை தன் அணி பக்கமாக திருப்பி விடுவதில் வல்லவர்.
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் தர கிரிக்கெட் விளையாடாமல் உள்ளே வந்தவர். அவரது அதிரடியான துவக்கம் பல போட்டிகளில் ஆஸ்திரேலியா பக்கம் வெற்றியை மாற்றி இருக்கிறது. அவர் திடீரென எல்லா பக்கங்களிலும் ரன் எடுக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக மாறுவது பந்து வீச்சாளர்களுக்கு கடினமானது.
விராட் கோலி இப்படித்தான்
இதுகுறித்து ரபாடா பேசும் பொழுது “விராட் கோலி மிகவும் பாரம்பரியமான பேட்டிங் அணுகுமுறையை கொண்டவர். அவர் நேரடியாக தாக்கி விளையாடி உங்களை காயப்படுத்த மாட்டார். ஆனால் ஸ்கோர் போர்டை பார்த்தால் அவர் ஏற்கனவே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை தெரிந்து கொள்ளலாம். அவரது விக்கெட்டை வீழ்த்தினால், நீங்கள் கடினமாக உழைத்து எடுத்த விக்கெட் ஆகவே இருக்கும்”
இதையும் படிங்க: இந்த டீம் பேட்டிங்க்கு 10 மார்க் பௌலிங் 1 மார்க் தான்.. செம்மையா மாட்டிக்க போறாங்க – அபினவ் முகுந்த் எச்சரிக்கை
“டேவிட் வார்னர் நல்ல பார்மில் இல்லையென்றாலும் கூட உங்களை பாதிக்கக் கூடியவர். அவர் வழக்கமில்லாத இடங்களில் கூட ரன்கள் எடுப்பார். அவரை அவுட் செய்ய நீங்கள் மிகவும் கவனமாகவும், முழு திறனுடனும் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






