இந்த டீம் பேட்டிங்க்கு 10 மார்க் பௌலிங் 1 மார்க் தான்.. செம்மையா மாட்டிக்க போறாங்க – அபினவ் முகுந்த் எச்சரிக்கை

0
1
Srh

இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற விளையாடும் 10 அணிகளில் ஒரு அணியின் பந்துவீச்சு குழு மிகவும் பலவீனமாக உள்ளதாக அபினவ் முகுந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த முறை ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அவர்களுடைய பௌலிங் யூனிட் இருந்தது. தற்போது மாறி உள்ள டி20 கிரிக்கெட்டில் பௌலிங் யூனிட் வலிமையாக உள்ள அணி தான் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு மார்க்தான் தர முடியும்

இதுகுறித்து அபினவ் முகுந்த் பேசும் பொழுது ” நீங்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய பேட்டிங் யூனிட்டுக்கு 10 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஆனால் அவர்களுடைய பௌலிங் யூனிட் எடுத்துக் கொண்டால் ஒரே ஒரு மதிப்பெண்தான் கொடுக்க முடியும். அவர்களுடைய பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையானது. எந்த அணியையும் பாதிக்கக் கூடியது. இந்த தொடரிலேயே மிகவும் வலிமையானது”

“அவர்கள் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் விளையாடினால் ஆபத்தானவர்கள். ஆனால் பவுலிங் யூனிட் எடுத்துக் கொண்டால் குறைபாடு பெரியதாக உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத பந்துவீச்சாளர்கள் பலர் உள்ளனர். ஏலத்தில் நிறைய பணத்துடன் வந்த அவர்கள் தங்களிடம் ஹெட், அபிஷேக் இஷான், கிளாசன் ஆகியோர் இருக்கும்போது, தேவையில்லாமல் லிவிங்ஸ்டன் மீது பெரிய பணத்தை செலவழித்து மாட்டிக் கொண்டார்கள்”

- Advertisement -

கடந்த காலத்தை பாருங்கள்

“அவர்களுடைய அணியில் பந்துவீச்சு அனுபவம் மிகவும் குறைவாக உள்ளது. ஐபிஎல் மட்டுமல்லாது அவர்களுடைய மாநில அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடாதவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பலரை ஸ்கவுட் மூலம் தேர்வு செய்து இருக்கிறார்கள். இப்படி அணியை உருவாக்கியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது”

இதையும் படிங்க : இதுக்காக என்னை நினைச்சு பெருமைப்படறேன்.. இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது.. 7 கிலோ வெயிட் வேலை செய்யும் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நன்றாக விளையாடிய கால கட்டங்களில் அவர்களுக்கு புவனேஸ்வர் குமார், நடராஜன் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது ஹர்சல் படேல் மற்றும் உனட்கட் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள்தான் பவுலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்க வேண்டிய நிலைமை உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -