வீடியோ: தினேஷ் கார்த்திக்கிடம் செல்பி கேட்ட ரசிகர்.. உடன் நின்ற அஸ்வின் செய்த காரியத்தால் அதிர்ந்துபோனே ரசிகர்!! இந்த வீடியோ பாருங்க..

0
20955

தினேஷ் கார்த்திக்கிடம் செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கரிடம், அவருடன் நின்ற ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதி வரும் டி20 தொடர் ஜூன் 29ஆம் தேதி துவங்கியது. முதல் போட்டி டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190 ரன்கள் அடித்து வலுவான நிலையை பெற்றது.

- Advertisement -

ஆறாவது விக்கெட்டிற்க்கு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது இயல்பான அதிரடியை வெளிப்படுத்தி 19 பந்துகளின் 41 ரன்கள் விளாசினார். இதற்கு அடுத்ததாக பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் சிலரிடம் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் வேகமாக ஓடிவந்து தினேஷ் கார்த்திக்கிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்ட தினேஷ் கார்த்திக் உடன் ரவிச்சந்திரன் அஸ்வினும் இருந்தார். செல்ஃபி எடுக்கும் சமயம் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் பொழுது, உடன் இருக்கும் சக பிரபலங்கள் அருகில் நிற்க மாட்டர். உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவர். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த ரசிகருக்கு மரியாதை கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொள்ள இவரும் உதவினார். இதன் வீடியோ பதிவு இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

- Advertisement -

இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் எந்த அளவிற்கு பங்களிப்பை கொடுத்தாரோ, அதற்கு இணையாக பந்துவீச்சில் அஸ்வின் பங்களிப்பை கொடுத்திருக்கிறார். நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கேப்டன் பூரான் மற்றும் ஹேட்மயர் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றினார்.

- Advertisement -