ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025.. என் தந்தை திட்டுகிறார்.. வெளியே நடக்கும் விசயத்தை கேட்க விரும்பவில்லை.. அஸ்வின் கருத்து

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அஸ்வின் பந்துவீச்சில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளேவில் ஒரு ஓவர் வீசிய அஸ்வின் 21 ரன்களை விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து அஸ்வின் பேசும் போது எதிரணி பேட்ஸ்மேன்களால் பொளக்கப்படுகிறார். இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அஸ்வின், நான் சரியாக விளையாடவில்லை என்றால் என்னுடைய தந்தை இன்னும் என்னை திட்டிக் கொண்டுதான் இருப்பார்.

விமர்சனம் குறித்து பதில்:

என்னை விரும்பும் மக்களிடத்தில் இருந்து என்னை நோக்கி விமர்சனம் வந்தால், அதை நான் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என்னை பற்றி கிண்டல் செய்யப்பட்டாலும் அதைப் பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன். ஆனால் சிலர் நம்மை நோக்கி நம்மை தாழ்த்த வேண்டும் என்று பேசுவார்கள்.

அதை நான் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன்.அது விஷமத்தனமானது என்பதை நான் புரிந்து கொள்வேன். நான் ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் இருக்கும் போது சமூக வலைத்தளத்தில் அறவே பயன்படுத்த மாட்டேன். வெளியே என்ன நடக்கிறது? யார் என்ன பேசுகிறார்கள் என்பதை நான் கவனிக்க மாட்டேன்.

- Advertisement -

தெரிந்து கொள்ள விரும்பவில்லை:

எப்போதாவது என்னுடைய நண்பர்கள் எனக்கு கவலைப்படாதே, நன்றாக விளையாடு என்று மெசேஜ் அனுப்பினாலும் இப்படி எல்லாம் எனக்கு அனுப்பாதீர்கள். வெளியே என்ன நடக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி விடுவேன். நாம் நன்றாக செயல்பட வேண்டும் என்று அக்கறையுடன் சொல்லப்படும் விமர்சனத்திற்கும், விசமத்தனத்தை பரப்ப வேண்டும் என்று கூறப்படும் விமர்சனத்திற்கு எனக்கு நன்றாக வித்தியாசம் தெரியும்.

இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணியில் அதிவேக சதம், அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் யார்?

இதனால் நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். நேற்று நான் இருந்ததை விட இன்று நான் சிறப்பாக முன்னேறி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்க்கையின் வெற்றி ரகசியமாக இருக்கிறது என்று அஸ்வின் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி நாளை நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by
Tags: AshwinCSK