ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ரன் வேட்டை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியிலும் இளம் வீரர்கள் பட்டையை கிளப்பி வருகிறார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை தடுமாறி வருகிறது.
இரண்டு அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் பல தவறுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் பல வீரர்கள் சதம் அடித்த நிலையில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இந்த சூழலில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர்சிபி அணிகளில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் யார்? அதிவேக சதம் அடித்த வீரர் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
சிஎஸ்கே ரெக்கார்ட்:
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை முரளி விஜய் தான் அதிவேக சதம் அடித்திருக்கிறார். முரளி விஜய் 45 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார். இந்த ரெக்கார்டு இன்னும் வேற எந்த சிஎஸ்கே வீரரும் முறியடிக்க வில்லை. இதேபோன்று சின்ன தல சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்துள்ளார்.
இதேபோன்று தனிநபர் அதிகபட்ச ஸ்கோரில் முரளி விஜய் சிஎஸ்கே அணிக்காக 127 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று அதிக தூரம் சிக்ஸர் அடித்த சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை ஆல்பி மார்க்கேல் பெற்றிருக்கிறார். அவர் 127 மீட்டர் தூரத்துக்கு சிக்சர் அடித்துள்ளார். இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெயசூர்யா பெற்றிருக்கிறார். இவர் 46 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார்.
மும்பை அணி ரெக்கார்ட்:
இதேபோன்று அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற பெயரை இஷான் கிஷன் பெற்று இருக்கிறார். இவர் 16 பந்துகளில் அரை சதம் அடித்தார். தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்தவர்களில் ஜெயசூர்யா தான் ரெக்கார்டு வைத்திருக்கிறார். அதில் 116 ரன்கள் அவர் அடித்திருக்கிறார். அதிக தூரம் சிக்ஸர் அடித்த மும்பை வீரர் என்ற பெருமையை பொலார்ட் வைத்திருக்கிறார். அவர் 113 மீட்டர் தூரம் சிக்சர் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் பிரித்வி ஷா மாதிரி ஆகப்போறீங்க.. சாய் சுதர்சன பார்த்து இதுல திருந்துங்க – பசித் அலி விமர்சனம்
இதேபோன்று ஆர்சிபி அணியில் 30 பந்துகளில் அதிவேக சதம் அடித்திருக்கிறார். ஐபிஎல் ரெக்கார்டை பொறுத்த வரை இதுதான் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் ஆகும். அதிவேக அரை சதம் பட்டியலில் கெயில் 17 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ரெகார்ட் வைத்திருக்கின்றார். தனிநபர் அதிகபட்ச ஸ்கோரிலும் ஆர்சிபி அணிக்காக 175 ரன்கள் அடித்தது முதன்மையாக இருக்கின்றது. அதேபோன்று அதிக தூரம் சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் பிரவீன் குமார் ஆர்சிபி அணிக்காக 124 மீட்டர் தூரம் அடித்து முதன்மை இடத்தில் உள்ளது.






