எவ்வளவு ரன் அடிச்சாலும் ருத்துராஜ்க்கு இந்த காரணத்தால் வாய்ப்பு கிடைக்கவில்லை – அஸ்வின் கருத்து

0
415

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் ஒரே ஆட்டத்தில் 220 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். மேலும் விளையாடிய ஐந்து இன்னிங்ஸில் 4 சதம் என மொத்தமாக 660 ரன்கள் விளாசினார். இதில் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனையும் படைத்தார். இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு  இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் இவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆனால் அவர் இந்திய அணியில் யாருக்கு பதிலாக சேர்க்கப்படுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினமாக மாறிவிட்டது.

ஏனென்றால் ஒரு இடத்திற்காக பல பேர் போட்டி போடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது ருத்துராஜ்  கெய்க்வாட், ரோகித் சர்மா, ஷிகர் தவான் ,சுப்மான் கில் ஆகியோருடன் போட்டி போடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இது ரிஷப் பந்து வேறு அவ்வப்போது தொடக்க வீரராக களம் இறங்குகிறார். ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.இதன் காரணமாக ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் வீரர்களுக்கு நெருக்கடி தான் ஏற்படும். ருத்துராஜ் ஜாலிக்காக ரன் அடிப்பது போல் விளையாடி இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்கள், இவருடைய ஆட்டத்தை பார்த்து மிகவும் சந்தோஷத்தில் இருப்பார்கள் என நம்புகிறேன்.

உலக கிரிக்கெட்டையும் இதே போன்று ருத்துராஜ் உற்சாகப்படுத்துவார். அதற்கான நேரம் வெகுவிரைவில் வரும் என அஸ்வின் கூறியுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை மட்டுமல்லாமல் டி20 தொடரான சையது முஸ்தாக் அலி தொடரில் ஆறு இன்னிங்ஸில் விளையாடிய ருத்துராஜ்  295 ரன்கள் விளாசினார் .தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்காக இஷான் கிஷன், கே எல் ராகுல், ரோகித் சர்மா ,ஷிகர் தவான் இஷன் கிஷன், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் போட்டி போடும் நிலையில் தற்போது ருத்துராஜ் கெய்க்வாட்டும் அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பதை அஸ்வின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.