கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இனி தயவு செய்து இந்த வீரரை மட்டும் அணியிலிருந்து நீக்காதீங்க..  26 வயது வீரரை பாராட்டிய அஸ்வின்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் புதிய பந்தில் அபாரமாக வீசிய அர்ஷ்தீப் சிங்கை தொடர்ந்து அணியில்  வைக்கும்படி இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் வீரர் அஸ்வின் கேட்டுக்கொண்டார். கட்டாக்கில் நடந்த இப்போட்டியில் அர்ஷ்தீப் 2 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இதன் மூலம் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சமீப காலமாக அர்ஷ்தீப் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகள் எடுத்ததால் தென்னாப்பிரிக்க தொடரின் முதல் போட்டியிலும் இடம் பிடித்தார்.

இனி நீக்காதீர்கள்:

 புதிய பந்தில் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை  காட்டினார் அர்ஷ்தீப். முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக்கை டக் அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸையும் வீழ்த்தினார். 3வது ஓவரிலேயே 16-2 என்ற நிலைக்கு தள்ளப்பட்ட தென்னாஃப்ரிக்கா அதிலிருந்து மீளவே இல்லை.

இது குறித்து பேசிய அஸ்வின், “அர்ஷ்தீப் சிங்கை இனி எப்போதும்  டிராப் செய்யாதீர்கள். அவருக்கு அணியில் தொடர்ந்து இடம் மிக முக்கியம். இன்றும் அதை நிரூபித்துவிட்டார்.நிச்சயம் அர்ஷ்தீப்பை என் நிகழ்ச்சிக்கு வரவழைப்பேன். நான் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக இருந்தபோதுதான் 2019இல் அவர் ஐபிஎல் அறிமுகம் ஆனார். அப்போது மிகவும் அனுபவமற்ற வீரராகஇருந்தார்.”

- Advertisement -

வருண் சக்கரவர்த்திக்கு பாராட்டு:

“பந்துவீச்சில் கண்ட்ரோல் இல்லை. ஆனால் அவன் பலம் எப்போதும் அட்டிடியூட்தான். எப்போதும் சண்டைக்கு தயார். எந்த கண்டிஷனாக இருந்தாலும் அவன்  ஸ்டார்டிங் லெவனில் இருக்க வேண்டியவன்,” என்று அஸ்வின் கூறினார். கடந்த 17 டி20 சர்வதேச போட்டிகளிலும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார் அர்ஷ்தீப்.

இதே போன்று தென்னாப்பிரிக்காவின்  நடுவரிசையை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்தார்  சுழற்பந்து வீரர் வருண் சக்ரவர்த்தி. டொனோவன் ஃபெரீராவையும் மார்கோ ஜான்சனையும் ஆட்டமிழக்கச் செய்த அவர், 3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அதில் ஒரு மெய்டனும் அடங்கும்.

இதையும் படிங்க: 8 புள்ளி வித்தியாசம்.. ஐசிசி ODI ரேங்கில் கெத்து காட்டும் ரோகித் விராட்.. டாப் 10ல் இந்தியர்கள் அசத்தல் – முழு விபரங்கள்

இது குறித்து பேசிய அஸ்வின், “வருண் சக்ரவர்த்தி இன்று ஒரு கம்பேக் கொடுத்ததில் மிக மகிழ்ச்சி. SMATஇல் அவன் பிரமாதமாக விளையாடவில்லை. ஆனால் இந்தியாவில் எப்போதும் நல்ல ஸ்பின் வீரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு இடத்திலும் கண்டிஷன் வேறுபடும். இந்த போட்டி அவனுக்கு நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கும்” என்றார். தமிழ்நாடு கேப்டனாக இருந்த வருண், 4 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்தார். இரண்டு முறை 0-47 என்ற சொதப்பல் செயல்பாடுகளும் அடங்கும். அதனால் தமிழ்நாடு குரூப் சுற்றோடு வெளியேறியது.

- Advertisement -
Published by