டேவிட் மில்லரிடம் மன்னிப்பு கேட்ட குயின்டன் டி காக் ; கில்லர் மில்லர் மின்னல் சதம்!

0
6991
Ind vs Sa

3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இன்று அசாம் மாநில கவுகாத்தி மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்.

- Advertisement -

இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 43 ரன்கள், கேஎல் ராகுல் 55 ரன்கள், சூரியகுமார் 61 ரன்கள், விராட்கோலி 4வது ரன்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 237 ரன்கள் குவித்தது.

இதை அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயின்டன் டி காக் துவக்கம் தர களம் இறங்கினார்கள். தீபக்சேகர் வீசிய முதல் ஓவரே மெய்டன் ஆனது. இதற்கடுத்து அர்ஸ்தீப் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டெம்பா பவுமா மற்றும் ரூஸோ ரன் எடுக்காமல் வெளியேறினார்கள். அதற்கடுத்து மார்க்கம் 33 ரன்களில் வெளியேறினார்.

இதற்கடுத்து சேர்ந்த குயின்டன் டி காக், டேவிட் மில்லர் ஜோடி அதற்கு அடுத்து விக்கெட் விழவே விடவில்லை. ஆரம்பத்தில் பொறுமை காத்து 10 அவர்களை மெதுவாக கடந்த இவர்கள். அடுத்த 10 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆண்டு விட்டார்கள். குறிப்பாக டேவிட் மில்லர் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் மனதிலேயே அவ நம்பிக்கையை விதைத்து விட்டார். அந்த அளவிற்கு அதிரடியில் இந்திய பந்து வீச்சை நையப்புடைத்து விட்டார்.

- Advertisement -

முதல் 10 ஓவருக்கு 70 ரன்கள் என்று இருந்த அணியின் ஸ்கோரை அடுத்த பத்து ஓவரில் 221 என்று இந்த ஜோடி கொண்டு வந்துவிட்டது. சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் தனது சர்வதேச 2வது டி20 சதத்தை அடித்து மிரட்டினார். இன்னொரு முனையில் நின்ற குவின்டன் டி காக் 48 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். வெல்லவே முடியாது என்று ஒரு கட்டத்தில் இருந்த ஆட்டத்தை, கடைசி ஓவரில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்தால் என்ற நிலைக்கு டேவிட் மில்லர் கொண்டு வந்ததுதான் மிகப் பெரிய விஷயம். இந்த இடத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஏதாவது வித்தியாசமாக நடந்து விடுமோ என்று நினைக்குமளவுக்கு ஆட்டத்தை டேவிட் மில்லர் மாற்றிவிட்டார். கடைசியில் தட்டுத்தடுமாறி இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் குயின்டன் டி காக் மிகவும் மெதுவாக விளையாடியது பின்னால் ஆட்டத்தை வெற்றிகரமாக டேவிட் மில்லர் முடிக்க முடியாமல் செய்துவிட்டது. இதனால் ஆட்டம் முடிந்த பொழுது இண்டன் டி கார்டு டேவிட் மில்லர் இடம் ” நீங்கள் சிறப்பாக விளையாடினார்கள். என்னை மன்னித்து விடுங்கள் ” என்று கூறியிருக்கிறார். இதை டேவிட் மில்லர் ஆட்டம் முடிந்து தெரிவித்தார்!