3 கேள்விக்கு மட்டும்.. பதில் சொல்லாமல் அடம் பிடித்த ஹர்திக் பாண்டியா.. என்ன காரணம்.?

0
290
Rohit

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை பொறுப்பில் இருந்து நீக்கி, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் ஹரிதிக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வந்து கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வு நடந்து ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு பக்கம் ஆகின்ற பொழுதும், இதை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதள பக்கங்களில் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பை சமாளித்து விட வேண்டும் என்பதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் அவர்கள் எப்போதெல்லாம் முயற்சி செய்கிறார்களோ அப்பொழுதெல்லாம் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

நேற்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இருவரும், இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டார்கள். இதில் முக்கியமான மூன்று கேள்விகளுக்கு இருவரும் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்து அப்படியே கடந்தார்கள். பத்திரிகையாளர்கள் மீண்டும் மீண்டும் கேட்டும் இருவரும் பதில் சொல்லவே இல்லை.

மூன்று முக்கிய கேள்விகள்

முதல் கேள்வியாக ஒரு பத்திரிக்கையாளர் “நீங்கள் குஜராத் டைட்டன்ஸ்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதற்கு, கேப்டன் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற டிமாண்ட் வைத்தீர்களா?” என்று கேட்டார்.

- Advertisement -

இரண்டாவது கேள்வியாக ” நீங்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வந்துவிட்டதால் கூடுதல் நெருக்கடி புதிய கேப்டன் கில்லுக்கு அந்த அணியில் ஏற்படும். எனவே இது குறித்து நீங்கள் அவரிடம் பேசினிர்களா? என்று ஹர்திக் பாண்டியாவிடம் கேட்கப்பட்டது.

மூன்றாவது கேள்வி மார்க் பவுச்சருக்கு “ரோகித் சர்மா ஏன் கேப்டனாக தொடரக்கூடாது? ஹர்திக் பாண்டியா உடனடியாக ஏன் கேப்டனாக வேண்டும்? என்று நீங்கள் நினைக்க என்ன காரணம் இருந்தது” என்று முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஓபனா சொல்றேன்.. ரிஷப் பண்ட்கிட்ட பழைய மாதிரி எதிர்பாக்காதிங்க.. இதான் காரணம் – கவாஸ்கர் பேட்டி

இந்த மூன்று கேள்விகளும்தான் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் எல்லோருக்குமே மனதில் இருந்தது. ஆனால் இந்த மூன்று முக்கியமான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்து கடந்து விட்டு, சம்பிரதாயமான கேள்விகளுக்கு மட்டும் இருவரும் நாடகத்தனமாக பதில் கூறியது மேலும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.