ஒரு பேட்ஸ்மேனை நம்பி மட்டும் ஆடிட்டு இருந்தா எப்படி கப் ஜெயிக்கமுடியும்… அவரு ஆடலைன்னா இப்படித்தான் மொத்தமும் க்ளோஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணியை சாடிய முன்னாள் இந்திய வீரர்!

0
142

பஞ்சாப் கிங் அணி எந்த திட்டமும் செய்யாமல் ஒரே பேட்ஸ்மேனை நம்பி களமிறங்குகிறது. இதுதான் அவர்கள் கோட்டை விடுவதற்கு காரணம் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை நான்கு லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு தோல்வி இரண்டு வெற்றிகளை பெற்றிருக்கிறது. இதில் மூன்று போட்டிகளில் ஷிகர் தவான் நல்ல ஸ்கோர் அடித்து அணிக்கு நம்பிக்கை கொடுத்ததால் இரண்டு போட்டிகளில் அணியை வெற்றிபெற உதவியது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணி 143 ரன்கள் அடித்தது. இதில் ஷிகர் தவான் மட்டுமே 99 ரன்கள் அடித்தார்.

அப்போட்டியில் 88 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தபிறகு இவர் ஒருவரே போராடி அவ்வளவு பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார். கடைசியாக நடந்து முடிந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இவர் எட்டு ரன்களுக்கு ஆட்டமிழக்க மொத்த அணியும் நல்ல பேட்டிங் பிட்ச்சில் 153 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

பின்னர் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டதால், பஞ்சாப் கிங்ஸ் கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்தது. இல்லையெனில் எப்போதோ இந்த ஸ்கோரை அடித்து மிகப்பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றிருக்கும். இவை அனைத்தையும் வைத்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

- Advertisement -

“மொஹாலி மைதானம் நன்கு பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். நிறைய ரன்களை அடிக்கக்கூடிய போட்டியாக அமையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஸ்கோர் அடிக்கவில்லை. நல்ல பார்மில் இருந்த ஷிகர் தவான் ஆட்டம் இழந்ததால், அடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேறி இவ்வளவு குறைவான ஸ்கோரை அடித்தனர்.

இதில் இருந்தே தெரிகிறது அணி மொத்தமும் ஷிகர் தவான் பேட்டிங்கை மட்டுமே நம்பி இருக்கிறது. ஏற்கனவே ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என்கிற பெயர் பஞ்சாப் அணிக்கு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு வீரரை மட்டுமே நம்பி இருந்தால், இந்த சீசனிலும் எப்படி கோப்பையை வெல்லும் அணியாக பலம்பெற முடியும்.” என்று சாடினார்.