” ராஜபக்ஷாவின் அதிரடியில் வலுவான நிலையில் பஞ்சாப் அணி “- அட்டகாசமான சிக்சர் வீடியோ இணைப்பு!

0
108

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி மொகாலியில் இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார். துவக்கத்திலிருந்தே அதிரடியாக துவங்கியது பஞ்சாப் அணி. அந்த அணியின் துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பனுக்கா ராஜபக்ஷா கேப்டன் தவான் உடனிணைந்து அதிரடியாக ஆடினார். இவர்கள் இருவரது ஜோடியும் வேகமாக ரன் குவித்ததோடு விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தவான் ஒரு முனையில் நிதானமாக ஆட ராஜபக்ஷா மறுமுனையில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

கொல்கத்தா அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் மைதானத்தின் எல்லா திசைகளுக்கும் பந்துகளை சிதறச் செய்து அதிரடி காட்டியது பஞ்சாப்.. கடந்த சீசனிலும் அதிரடியாக ஆடிய பனுக்கா ராஜபக்ஷ இந்த சீசனின் முதல் போட்டியிலேயே தனது வான வேடிக்கையை காட்டினார். மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இவர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் கடந்து துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய சுனில் நரேன் பந்துவீச்சில் நேராக இமாலய சிக்சர் ஒன்றை அடித்தார் ராஜபக்ஷா. சுனில் நரேன் வீசிய ஸ்ட்ரைட் டெலிவரியை பிக் செய்து கிரீஸில் இருந்து ஸ்டெப் அவுட் செய்து வந்து நேராக இவர் அடித்த ஷாட் சைடு ஸ்கிரீனை தாண்டிச் சென்று விழுந்தது. அந்த சிக்ஸரின் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது வரை பஞ்சாப் அணி 12.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் திவான் 38 ரன்கள்டனும் ஜித்தேஷ் ஷர்மா பத்திரங்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை பஞ்சாப் அணி வலுவான நிலையில் உள்ளது.

வீடியோ :