பஞ்சாப் பிரப்சிம்ரன் சிங் அதிரடி சதம் ; டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்திருக்கிறார்!

0
295
Prabhsimran

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளில், இரண்டாவது போட்டியில் டெல்லி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு துவக்கம் தர வந்த கேப்டன் ஷிகர் தவான் 7 ரன்களிலும் அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும் அதிரடி ஆட்டக்காரர் ஜிதேஷ் சர்மா 5 ரன்களிலும் வெளியேறினார்கள்.

ஆனால் இன்னொரு முனையில் நிலைத்து நின்ற துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சாம் கரனுடன் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சாம் கரன் 20 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து வந்த ஹர்ப்ரித் பிரார் 2, ஷாருக்கான் 2, சிக்கந்தர் ராஸா 11* ரன்கள் மட்டுமே எடுத்தாலும், மிகச் சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் தனது முதல் ஐபிஎல் சதத்தை 61 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் பதிவு செய்தார்.

- Advertisement -

அவர் 65 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகாத வீரர்கள் அடித்த சதத்தில் இது இரண்டாவது சதமாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து இருக்கிறது. டெல்லி அணியின் தரப்பில் இஷாந்த் சர்மா 3 ஓவர்களுக்கு 27 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.