பஞ்சாப் தொட முடியாத இடத்தில் சாதனை.. கலக்கிய டாப் ஆர்டரின் ருத்ர தாண்டவம்.. ஹைதராபாத்தை வென்றது

0
31
Shreyas

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் பண்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இதுவரையில் இந்த ஐபிஎல் தொடரில் இந்த அணி தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிரட்டிய அபிஷேக் மற்றும் ஹெட்

இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஜோடி பவர் பிளேவில் விக்கெட் இழப்பில்லாமல் 15 ரன்கள் குதித்தது. சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார்.

இதற்கடுத்து போட்டிக்குள் வந்த பஞ்சாப் கிங்ஸ் ஆட்டத்தை கட்டுப்படுத்தியது. கிளாசன் 33 பந்துகளில் 39 ரன்கள், இஷான் கிஷான் 17 பந்தில் 27 இடங்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

பஞ்சாப் அதிரடி

இதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ரியன்ஸ் ஆர்யா 20 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 25 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: எங்க ஹேசில்வுட்டை சூரியவன்சி பண்ண சம்பவம் வேற மாதிரி.. பையன் வீடியோ கேம் மாதிரி ஆடறான் – மைக்கேல் கிளார்க் பேட்டி

இதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை களத்தில் நின்று 33 பண்டுகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக 200+ இலக்கை பத்தாவது முறையாக வெற்றிகரமாக துரத்திய அணியாக சாதனை படைத்தது. இரண்டாவது இடத்தில் ஆறு முறை துரத்திய மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது.

- Advertisement -