சூரியவன்சி எங்க நாட்டுல என்ன பண்றாருனு பாக்கலாம்.. அவருக்காக நான் காத்துகிட்டு இருக்கேன் – நியூசி கோச் பேட்டி

0
0

​இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் சவாலான சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

​இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள நிலையில், இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

​மிகவும் இளம் வயதிலேயே ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

​இதுகுறித்து நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் பேசும்போது “அவரை வேகமும் பவுன்சும் நிறைந்த விக்கெட்டுகளில் பார்க்க நான் விரும்புகிறேன், அங்கு அவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அவர் ஒரு சிறந்த திறமையான பிளேயர், ஐபிஎல் தொடரில் உலகின் சிறந்த பௌலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியதை நாம் பார்த்திருக்கிறோம்”

- Advertisement -

“​அந்த ஆட்டத்தை நியூசிலாந்தின் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு எப்படி மாற்றுகிறார் என்பதும், எங்கள் நாட்டின் கண்டிஷனில் நாங்கள் அவருக்கு எப்படி பௌலிங் செய்கிறோம் என்பதுமே மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒரு கோச்சாகSecret-ஆக எனது பிளேயர்கள் பிரஷரில் இருக்கும்போது எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கவே நான் விரும்புவேன். அவர் இங்கு வரவில்லை என்றாலும் இந்திய அணியில் அவரைத் தவிர பல சிறந்த பிளேயர்கள் இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -