இந்திய இளம் உள்நாட்டு வீரர் வைபவ் சூரியவன்சி வீடியோ கேம் விளையாடுவது போல பேட்டிங் செய்வதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டி இருக்கிறார்.
நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக 26 பந்துகளை மட்டுமே சந்தித்து 78 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் தொடரில் உலகின் தலைசிறந்த பவுலர்களை அடித்து நொறுக்கி கொண்டு இருக்கிறார்.
யாரும் அருகில் இல்லை
சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது பதினைந்து வயதாகும் வைபவ் சூரியன்சி இப்பொழுதே அதற்கு தயாராக இருக்கிறார்.
அதே சமயத்தில் அவர் தற்போது விளையாடும் அளவுக்கு அதிரடியாக அவருடைய வயதில் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட்டிலேயே யாரும் இல்லை என்பது பெரிய வியப்பான செய்தியாக இருக்கிறது. அவர் அடிக்கும் அளவுக்கு பந்தை மிகவும் துல்லியமாக அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் தற்போது யாருமே கிடையாது.
வீடியோ கேம் மாதிரி ஆடுகிறார்
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் போது “அவர் ஆரம்பத்திலேயே ஹேசில்வுட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார். நேராக அடிப்பதும் மைதானத்தில் இரு பக்கங்களில் அடிப்பதும் அவருடைய தனித் திறன். இது நம்ப முடியாத அளவுக்கு அசாதாரணமாக இருக்கிறது. என் வயதில் இது போன்ற திறமையை நான் பார்த்ததே இல்லை. அவர் பெயர் புகழ் எல்லாவற்றையும் தள்ளி வைத்து நான் எவ்வளவு தொலைவு பந்தை அடிக்க முடியுமோ அடிக்கிறேன் என்று அடிக்கிறார்”
இதையும் படிங்க : என்னை நீங்க திட்டுவது நியாயம்தான்.. ஆனா இந்த உண்மையை தெரிந்து கொண்டு திட்டுங்க – பிளமிங் மனம் திறந்த பேச்சு
“இளமையின் அந்த அறியாமை ஒரு அழகான விஷயம். அவர் எடுத்து வரும் கணக்குகள் வீடியோ கேம் மாதிரி இருக்கிறது. அவர் பந்தை எளிமையாக அடிப்பது உண்மையில் ஆச்சரியப்படத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.






