ஐபிஎல் 2025

59 பந்து 109 ரன்.. மும்பையை துரத்திய பஞ்சாப் ஜோடி.. ஆர்சிபியா குஜராத்தா?.. புள்ளி பட்டியல் ரேஸ்

இன்று ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெல்லும் அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்கலாம் என்கின்ற நிலை இருந்ததால் போட்டிக்கு முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வேகத்தை குறைத்த பஞ்சாப்

முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரியான் ரிக்கல்ட்டன் 20 பந்தில் 27 ரன், ரோகித் சர்மா 21 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த திலக் வர்மா 4 பந்தில் 1 ரன், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்தில் 26 ரன் எடுத்து வெளியேறினார்கள்.

இதைத் தொடர்ந்து ஒரு முனையில் நீண்ட நேரம் நிலைத்து நின்று இறுதி வரையில் விளையாடிய சூரியகுமார் யாதவால் 39 பந்துகளுக்கு 57 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இவருடன் கடைசியில் அதிரடி காட்டிய நமன் திர் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இந்த ஆடுகளத்தில் குறைந்தபட்சம் 200 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் தரப்பில் அர்ஸ்தீப், ஹர்பரித் பிரார் மற்றும் வைசாக் விஜயகுமார் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

மிரட்டிய பஞ்சாப் ஜோடி

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 16 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த நிலையில் ஜோடி சேர்ந்த பிரியன்ஸ் ஆர்யா மற்றும் ஜோஸ் இங்லீஷ் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதங்கள் அடித்து 59 பந்தில் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.

இந்த ஜோடியில் பிரின்யஸ் ஆர்யா 35 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் மற்றும் ஜோஸ் இங்லீஷ் 42 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 16 பந்தில் 26 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. நேரடியாக பஞ்சாப் அணி முதல் தகுதி சுற்றில் இறுதிப் போட்டிக்கு விளையாடும்.

இதையும் படிங்க : 18 ஆண்டு.. இனி யாருக்கும் கஷ்டம்.. சூரியகுமார் செய்த 3 மெகா ரெக்கார்டுகள்.. வேற லெவல் சீசன்

தற்போது புள்ளி பட்டியலில் 18 புள்ளிகள் உடன் அனைத்து போட்டிகளையும் விளையாடிய குஜராத் இருக்கிறது. இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கும் ஆர்சிபி 17 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. நாளை ஆர்சிபி அணி லக்னோ அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் பஞ்சாப் அணியுடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கும். இல்லையென்றால் குஜராத் இரண்டாவது இடத்தில் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by