இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ராஜஸ்தான் மான்சவாய் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சூரியகுமார் யாதவ் பிரம்மாண்டமான 3 சாதனைகளை படைத்திருக்கிறார்.
இந்த குறிப்பிட்ட போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிக முக்கியமானதாக இருந்தது.
ஆச்சரியப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்
இந்தப் போட்டிக்கு முன்பாக ஆடுகளம் குறித்த அறிக்கையில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்றும் எனவே டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் டாஸ் வென்ற ஸ்ரேயா செய்ய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரியான் ரிக்கல்டன் 20 பந்துகளில் 27 ரன்கள், ரோகித் சர்மா 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
சூரியகுமார் யாதவ் சாதனை
இதற்கு அடுத்து இன்று மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூரியகுமார் யாதவ் 25 ரன்கள் தாண்டியதும், நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் தொடர்ந்து 25 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14 போட்டிகளில் 25 ரன்கள் தாண்டி எடுத்த முதல் வீரர் என்கின்ற மெகா ரெக்கார்டை படைத்தார்.
இதையும் படிங்க : தோனி ரிஷப் பண்ட்டை பாத்து ரகானே திருத்தி இருக்கணும்.. நீங்க பெரிய அதிரடி பேட்ஸ்மேனா? – சேவாக் விமர்சனம்
இதைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் சீசனில் 600 ரன்கள் தாண்டினார். இது அவருக்கு ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது 600 ரன் சீசன் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் மிடில் ஆர்டரில் வந்து இரண்டு முறை 600 ரன்கள் தாண்டிய ஒரே பேட்ஸ்மேன் சூரியகுமார் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் அடித்திருந்தது அந்த அணிக்கு சாதனையாக இருந்தது. இதையும் சூரியகுமார் யாதவ் முறியடித்து 619 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் அதிக ரன்கள் ஒரு சீசனில் எடுத்தவராக சாதனை படைத்தார்.






