இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் இளம் வீரர் பிரியன்ஸ் ஆர்யா அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் இறுதியில் சரித்திர சாதனையை தவறவிட்டார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இந்த முறை நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதிரடியில் மிரட்டிய பஞ்சாப்
இதைத் தொடர்ந்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது கூப்பர் கனோலி 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் குவித்தார்.
இன்னொரு முனையில் அதிரடி காட்டிய பிரியன்ஸ் ஆர்யா சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 4 கவுண்டர்கள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 93 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஒரு சதம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் இன்று சதம் அடித்திருந்தால் ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்த முதல் அன் கேப்ட் இந்திய வீரராக சரித்திர சாதனை படைத்திருப்பார்.
ஆர்சிபி சாதனை உடைந்தது
இதைத்தொடர்ந்து ஸ்டோய்னிஸ் 16 பந்துகளில் 29 ரன்கள், ஷஷான்க் சிங் 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க : RRயை வீழ்த்தி மும்பைக்கு சோகம் தந்த KKR.. ஜடேஜா ஓவரில் நடந்த பரிதாபம்.. ரகானே நிம்மதி – என்ன நடந்தது
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி 250 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது. இதை தற்போது பஞ்சாப் அணி உடைத்து 254 ரன்கள் எடுத்திருக்கிறது.






