RRயை வீழ்த்தி மும்பைக்கு சோகம் தந்த KKR.. ஜடேஜா ஓவரில் நடந்த பரிதாபம்.. ரகானே நிம்மதி – என்ன நடந்தது

0
119
Rinku

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராடி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதுவரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியிலும் வெல்லாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நல்ல தொடக்கம் ஆனால் சரிவு

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் 70 ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்கள். ஜெய்ஸ்வால் 29 பந்தில் 39 ரன்கள், வைபவ் சூரியவன்சி 26 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்கள். இந்த தொடக்கத்தை மற்ற ராஜஸ்தான் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. வரும் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி ரன் பெரிதாக கொடுக்காமல் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

கொல்கத்தா முதல் வெற்றி

இதைத்தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 85 ரன்னில் ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ரிங்கு சிங் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை பர்கர் தவறவிட்டார். இது ராஜஸ்தான் போட்டியையும் தோற்பதற்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : எனக்கு அந்த விஷயத்தை கேட்கவே வெறுப்பா இருக்கு.. கடைசி பந்து வீசறவரை விடமாட்டேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

இதனால் வாழ்வு பெற்ற ரிங்கு சிங் ஆட்டம் இழக்காமல் 34 பந்தில் 53 ரன்கள், இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடிய அனுக்குல் ராய் 16 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்கள். கொல்கத்தா இறுதி ஓவரில் இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபமாக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -