ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாகட் பிளேயர் விதி இந்த ஆண்டும் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இந்த விதி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இம்பாக்ட் பிளேயர் என்னும் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு அணி தங்களுக்கு தேவைப்படும்போது 12வது வீரராக ஒரு வீரரை பேட்ஸ்மேன் ஆகவோ அல்லது பந்துவீச்சாளராகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த விதி சிலரிடையே வரவேற்பையும் சிலரிடையே எதிர்ப்பையும் பெற்றது.
ஒரு அணி பேட்டிங் செய்யும்போது இக்கட்டான நிலையில் இருந்தால், பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு புதிய வீரரை கூடுதலாக தங்கள் அணிக்குள் சேர்ந்து ரன்களை அதிகப்படுத்தவோ, அல்லது ஒரு அணி பந்து வீசும் போது ஏற்கனவே இருக்கும் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும்போது புதியதாக ஒரு பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வர இந்த விதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு கிரிக்கெட் போட்டி 11 வீரர்களைக் கொண்டு விளையாடுவதே நல்லதாகும் என இந்திய முன்னாள் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை கூறிவரும் நிலையில் இது குறித்து பஞ்சாப் வீரர் மார்க்கஸ் ஸ்டாய்னிஷ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த விதிமுறை குறித்து அவர் கூறும் போது “இம்பாக்ட் பிளேயர் விதிமுறை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் இந்திய நிர்வாகம் இந்த விதிமுறையை விட்டுவிட்டு முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய நோக்கத்திற்கு உதவாது என்பது எனது கருத்தாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விதி நீக்கப்படுவதை காண நான் விரும்புகிறேன். இந்த விதி உண்மையில் இந்த ஆண்டு நீக்கப்படும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க:18 மாசமா நான் தொல்லையா இருக்கேன்.. ஆனா இந்திய ரசிகர்கள் இந்த விஷயத்தை புரிஞ்சுக்கணும் – ட்ராவிஸ் ஹெட் கருத்து
முந்தைய ஐபிஎல் சுழற்சியில் ஆல்ரவுண்டர்களை மையமாக வைத்து அணிகள் உருவாக்கப்பட்டபோது இந்த விதி இருந்ததால் அது பாதகமாக இருந்தது. உண்மையில் இம்பாக்ட் பிளேயர் விதி நல்லதல்ல. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சலிவா ஐபிஎல் தொடருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இது பந்து வீச்சாளர்களுக்கு நல்ல முறையில் உதவும்” என்று அவர் கூறியிருக்கிறார்.