சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணி வீரரான டிராவிஸ் ஹெட் இந்தியா அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியாவின் பெரிய தலைவலி
கடந்த 18 மாதங்களாக எப்போதெல்லாம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி தொடர்களில் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் அமைந்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 163 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அதுமட்டுமல்லாமல் அதே ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அடித்த 137 ரன்கள் இந்திய ரசிகர்களால் மிகவும் மறக்க முடியாத ஒன்றாகும். ஏனென்றால் அது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நீலக்கடல் ரசிகர்களுக்கு நடுவே நடைபெற்றது. அந்தப் போட்டியிலும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அது என் இயல்பில் இல்லை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன், இந்தியா என்பது எவ்வளவு பெரிய நாடு, மேலும் இந்தியா பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டது என்பதை நான் மதிக்கிறேன். இந்திய அணிக்கு எதிராக ஓரிரு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அது என் இயல்பில் இல்லாதது. அதனால் நான் அதை ஒரு மகிழ்ச்சியான முறையில் விளையாடுவேன் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:விராட் தோனி ரோகித்.. இந்த மூணு பேரு கிட்ட இந்த மூணு விஷயம் எனக்கு வேணும் – நிதிஷ் குமார் விருப்பம்
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி அல்லது முடிவு அல்லது எனது செயல் திறன் இவைகள் வேடிக்கையாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இயல்பாக அவை என்னை தூண்டுவதில்லை. நான் என்னை ரசிக்க முயற்சிக்கிறேன், கடந்த 18 மாதங்களாக இந்திய அணிக்கு எதிராக பலமுறை நான் நன்றாக விளையாடும் நிலையில் வைக்கப்பட்டுள்ளேன். ஆனால் அதே நிலையில் அவர்கள் எங்களுக்கு எதிராக சிறப்பாகவும் விளையாடியுள்ளனர். எனவே இந்திய ரசிகர்கள் இடையேயான அந்த உறவை நான் உணர்ந்து கொள்கிறேன்” என்று ஹெட் கூறி இருக்கிறார்.






