என்னோட பிளான்ல நான் சொதப்பிட்டேன்.. ஆனா ரெண்டு புது பசங்க தனியா நின்னு முடிச்சிருக்காங்க – ஷிகர் தவான் பேட்டி

0
538
Shikar

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 17வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டிக்கான டாஸில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. கில் 48 பந்தில் ஆட்டம் இழக்காமல் 89 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா நான்கு ஓவர்களில் 44 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆட்டம் இழந்தார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய நான்கு விக்கெட்டுகள் 74 ரன்கள் எடுத்திருந்தபோது விழுந்துவிட்டது.

இப்படியான நிலையில் இந்திய உள்நாட்டு வீரர்கள் சஷான்க் சிங் ஆட்டம் இழக்காமல் 29 பந்தில் 61 ரன்கள், அசுடோஸ் சர்மா 17 பந்தில் 31 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். பரபரப்பான இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த பொழுது, இரண்டு இந்திய உள்நாட்டு வீரர்கள் வெற்றி பெற்று தந்தது பொதுவான இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் “இது ஒரு அற்புதமான போட்டி. மிக மிக நெருக்கமாக சென்று முடிந்திருக்கிறது. அணியின் இளம் வீரர்கள் இந்த வேலையை செய்து முடித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். டாப் ஆர்டர்கள் நல்ல துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக நான் சீக்கிரத்தில் அவுட் ஆகிவிட்டேன். ஆனாலும் பவர் பிளேவில் 60 ரன்கள் பக்கம் வந்திருந்தது. நாங்கள் தொடர்ந்து பார்ட்னர்ஷிப்ளை உருவாக்கினோம்.

இதையும் படிங்க : யாருனே தெரியாதவங்க வந்து எங்களை முடிச்சு விட்டுட்டாங்க.. தோல்விக்கு வேற ஒரு காரணம் இருக்கு – சுப்மன் கில் பேட்டி

ஷசான்ங் சிங் உள்ளே வந்து சிக்ஸர்கள் அடித்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் பேட்டிங் வரிசையில் ஏழாம் இடத்தில் ஆரம்பித்து, இன்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் வகையில் விளையாடி இருப்பது அற்புதமான ஒன்று. அதே சமயத்தில் இளம்வீரர் அசுடோஸ் சர்மாவும் மிக நன்றாக விளையாடினார். இந்த இரண்டு வீரர்களும் அழுத்தத்தில் தங்களை வைத்து ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -