மேட்ச்க்கு முன்ன சாகல் நிலைமை இதுதான்.. நான் கேட்டப்ப அவர் ஒரு வார்த்தைதான் சொன்னாரு – ரிக்கி பாண்டிங் பேச்சு

0
157
Ricky

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியாக பந்துவீச்சில் வெற்றி பெற்றது. இதற்கு சாகல் பந்துவீச்சு எந்த அளவிற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 3.1 ஓவரில் 39 ரன்கள் எடுத்து அற்புதமான துவக்கத்தை பெற்றது. ஆனால் அதற்கு அடுத்து விக்கட்டுகளை இழந்து மிக மோசமாக 111 ரன்கள் எடுத்து சுருண்டது.

- Advertisement -

பந்துவீச்சில் கலக்கிய பஞ்சாப்

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா அணி முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதற்குப் பிறகு கேப்டன் ரகானே மற்றும் ரகுவன்சி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து 50 ரன்கள் தாண்டி அணியை எடுத்துச் சென்றார்கள். கேப்டன் ரகானே அவுட் இல்லாத போதும் ரிவ்யூ எடுக்காமல் பரிதாபமாக வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் கொல்கத்தா அணி வெறும் 95 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதில் பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்ட சாகல் 4 ஓவருக்கு 28 ரன்கள் தந்து முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

உடல் தகுதி பரிசோதனை நடந்தது

இந்த நிலையில் நேற்று சாகல் பந்து வீச்சில் கலக்கிய பொழுதும் கூட அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததாகவும், ஆனால் அதையெல்லாம் தாண்டி நம்பிக்கையுடன் அவர் களம் இறங்கி அணியை வெற்றி பெற வைத்திருப்பதாகவும் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் கப்தான் கிடையாது.. ஆனா பஞ்சாப் கைவசம் வேற லெவல் 2 சாதனை.. சிஎஸ்கே மும்பைக்கு ஏமாற்றம்

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது ” கடந்த போட்டியில் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக இன்றைய போட்டியில் அவரால் விளையாட முடியுமா என்கின்ற உடல் பரிசோதனை நடைபெற்றது. நான் அவரிடம் மேட் நீங்கள் இன்று விளையாடுவீர்களா உங்களால் முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்டேன். அதற்கு அவர் என்னை விட்டு விடுங்கள் என்னை எப்படியாவது மைதானத்திற்கு அனுப்புங்கள் என்று கூறினார். நாங்கள் இந்த போட்டியில் தோல்வியடைந்து இருந்தால் கூட இரண்டாவது பகுதியில் செயல்பட்டு இருந்த விதத்திற்காக பெருமைப்படாமல் இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -