ஐபிஎல் கப்தான் கிடையாது.. ஆனா பஞ்சாப் கைவசம் வேற லெவல் 2 சாதனை.. சிஎஸ்கே மும்பைக்கு ஏமாற்றம்

0
12
Punjab

நேற்று ஐபிஎல் தொடரில் வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை 95 ரன்னுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்று இரண்டு மகத்தான சாதனைகளை தன் கைவசம் கொண்டு வந்திருக்கிறது.

பொதுவாக ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. கடைசியாக 240 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியால் அதை ஹைதராபாத் அணியிடம் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஆண்டு பஞ்சாப் சம்பவம்

ஐபிஎல் தொடர் வரலாற்றில் கடந்த ஆண்டு மிகவும் முக்கியமான சீசனாகும். ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் விதி இரண்டாவது ஆண்டாக தொடர்ந்தது. முதல் ஆண்டில் இம்பேக்ட் பிளேயர் விதியில் பழகிய அணிகள் இரண்டாவது ஆண்டில் அதை எப்படி மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை கண்டறிந்து இருந்தன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கூடுதல் வேகத்தில் விளையாடிய ரன்களை குவித்தார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 262 ரன்கள் எடுக்க, அதைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு ஓவர்கள் மீதம் வைத்து வென்று சாதனை படைத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வெற்றிகரமான ரன் துரத்தலாக இது அமைந்தது. இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 222 ரன்கள் துரத்தியது இருந்தது.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த ஆண்டு சம்பவம்

இந்த நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான ஐபிஎல் தொடரில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு வெற்றிகரமாக 50 ரன்கள் தாண்டியது. எனவே அந்த அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : கருண் நாயர் தொல்லை என்னால தாங்க முடியல.. கடைசியா வேற வழி இல்லாம அதை செஞ்சேன் – டெல்லி கோச் பதானி பேட்டி

இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கொல்கத்தா அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 15.1 ஓவரில் ஆல் அவுட் செய்து 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்னை டிபென்ட் செய்த அநியாயமும் சாதனை படைத்தது. தற்போது அதிகபட்ச ரன்னை சேஸ் செய்தது, குறைந்தபட்ச ரன்னை டிபன் செய்வது என இரண்டு சாதனைகளும் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் இருக்கிறது. இதற்கு முன்பாக சிஎஸ்கே 2009 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 116 ரன்களை டிபென்ட் செய்து இருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -