இந்திய கிரிக்கெட்

222 ரன் சாதாரணமானது கிடையாது.. உடம்பு ரொம்ப டயர்டு ஆயிடுச்சு.. ஆனா தோல்விக்கு காரணம் இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் உள்ளிருந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் விளையாடிய பஞ்சாப் சிறப்பாக ஆடி 222 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் மெதுவாக விளையாடி 27 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய ஏதோ கடினம் இருப்பது போல தெரிந்தது. பின்பு ராஜஸ்தான் விளையாட வந்த போது எளிதாக பஞ்சாப் அணியை தோற்கடித்தது.

நாங்கள் இதில் குறைவாக இருந்தோம்

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “222 ரன் என்பது நல்ல ஸ்கோர். எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு பாராட்டு. இந்த ஆடுகளம் மெதுவாகவும் பந்து கொஞ்சம் நின்று வந்ததும், எங்களுடைய பேட்டிங் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் பந்து வீச்சில் எங்களுடைய திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. இதில் நாங்கள் குறைவாக இருந்தோம்”

“ராஜஸ்தான் அணியில் இறுதியில் பெரேரா மற்றும் துபே இருவரும் சிறப்பான முறையில் கூட்டணி அமைத்து விளையாடி ரன்கள் எடுத்தார்கள். இந்த வடிவத்தில் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் வகையில் பேட்டி மாறிவிட்டது. ஆனால் நாம் பந்துவீச்சு திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில் தான் எல்லாம் இருக்கிறது”

- Advertisement -

உடம்பு களைப்பாகிவிட்டது

“நாம் இதுவரை செய்து வந்த விஷயங்களையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். உடலும் கொஞ்சம் களைப்பாக இருந்தது. ஆனால் இதை காரணமாக சொல்ல முடியாது. அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. திட்டமிட்டு மீண்டும் திரும்பி வர வேண்டும்”

இதையும் படிங்க : 100 முறை.. அடித்து நொறுக்கும் பஞ்சாப்.. 9 அணிகளை தாண்டிப் படைத்த பிரம்மாண்ட சாதனை.. கோட்டைவிட்ட ராஜஸ்தான்

“இது நமக்கு முதல் தோல்வி. இதிலிருந்து நாம் நிறைய பாடங்களை கற்றுக் கொள்ளலாம். இத்துடன் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்க விரும்புகிறேன். நாங்கள் நல்ல முறையில் திருப்பி வந்து மீண்டும் போட்டியை வெல்வோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by