இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியான ஒரு சாதனையை படைத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பார்ட்லெட் மற்றும் ஷஷான்க் சிங் இடத்திற்கு பெர்குஷன் மற்றும் சூரியன்ஸ் ஷெட்ஹே பஞ்சாப் அணியில் வாய்ப்பு பெற்றார்கள். ராஜஸ்தான் அணியில் சிம்ரன் ஹெட்மயர் மற்றும் ரவி பிஸ்னாய் நீக்கப்பட்டு யாஸ்ராஜ் பூன்ஜா மற்றும் டசன் சனகா சேர்க்கப்பட்டார்கள்.
சீரான ஆட்டம்
முதலில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா 11 பந்துகளில் 29 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து கூப்பர் கனொலி 14 பந்துகளில் 30 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்கள்.
இந்த நிலையில் இறுதி கட்டத்தில் அருமையாக பினிஷிங் செய்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. யாஸ்ராஜ் பூன்ஜா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
சிக்ஸரில் சாதனை
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 700 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. 10 அணிகள் சேர்ந்து இதை அடித்திருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி மட்டுமே 100 சிக்ஸர்கள் அடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக 100 சிக்ஸர்கள் அடித்த அணி என பஞ்சாப் சாதனை படைத்திருக்கிறது. மேலும் அவர்களது அதிரடி வெற்றிக்கு ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியை விட அதிக சிக்ஸர்கள் அடிப்பதே காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பதானி உனக்கு பிளமிங் தோனி பத்தி பேச தகுதி இல்லை.. நீ முதல்ல என்ன செஞ்சிருக்க – ஸ்ரீகாந்த் விமர்சனம்
101- பஞ்சாப்
92 – எஸ்.ஆர்.எச்.
90 – ஆர்சிபி
72-ஆர்ஆர்
63-சிஎஸ்கே
60-டிசி
59 – எம்.ஐ
56- கேகேஆர்
55-ஜிடி
55-எல்.எஸ்.ஜி






