இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
தற்போது பஞ்சாப் அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை மிகவும் சிக்கலாக்கி உள்ளது. தொடர்ந்து ஆறு போட்டிகளை வென்ற அணி தொடர்ந்து ஆறு போட்டிகளை தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியால் எட்டு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் ஆர்சிபி 18 புள்ளிகள் எடுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது ” இந்த ஆட்டம் எங்கு கை மாறியது என்றால் அவர்கள் பவர் பிளேவை மிகவும் சிறப்பாக ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக பவர்பிளே முடிந்தும் தாக்கி விளையாடினார்கள். அவர்கள் பவர் பிளேவை கைப்பற்றி உள்ளார்கள். நாங்கள் முதல் ஆறு ஓவர்களிலேயே தோல்வி அடைந்து விட்டோம்”
“எங்களுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை தருவார்கள். ஆனால் இன்று கிடைக்கவில்லை. மேலும் நானும் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தது அணியை பாதித்துவிட்டது. மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடினாலும் கூட அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை”
இதையும் படிங்க : நாங்க வெற்றிக்கு தகுதியானவர்கள் இல்லை.. எங்களுக்கு இந்த தோல்வி ரொம்ப அவசியமானது – கில் பேச்சு
“நான் இப்போதும் பாசிட்டிவாக இருக்கிறேனா என்றால் நிச்சயம் இருக்கிறேன். கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. சூரியன் நாளையும் உதிக்கும். எனவே நான் அடுத்த போட்டிக்கு மிகவும் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.