இன்னைக்கு எங்க வெற்றிக்கு காரணம் ஷஷான்க் சிங்தான்.. அவர்தான் என்கிட்ட அதை சொன்னார் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
32
Shreyas

இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு முக்கியமான பந்துவீச்சு மாற்றத்தை செய்தார். அது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் செய்த முக்கிய மாற்றம்

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி பவர் பிளேவில் 105 ரன்கள் எடுத்தது. மேலும் 8 ஓவர்கள் முடிவில் ஆட்டம் இழக்காமல் 120 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஒட்டுமொத்தமாக ஆட்டம் ஹைதராபாத் அணியின் பக்கமாக இருந்தது.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சுக்கு ஷஷான்க் சிங்கை கொண்டு வந்தார். ஏழாவது ஓவரை சிறப்பாக வீசியவர், அடுத்து ஒன்பதாவது ஓவரில் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவர் விக்கெட்டையும் கைப்பற்றினார். இது போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு ஐதராபாத் 219 ரன்னுக்கு கட்டுப்படுத்தினார்கள்.

- Advertisement -

அவர்தான் கேட்டார்

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்பொழுது “எங்கள் பவுலிங் பவர் பிளே முடிந்ததும் நாங்கள் அனைவரும் ஒன்றாக கூடினோம். அப்போது ஷ்ஷான்க் சிங் என்னிடம் பந்து வீசுவதற்கு அணுகினார். எனக்கும் அப்போது 120 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர் தேவைப்பட்டார். அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டார். அவரது சிந்தனைக்கு எனது பாராட்டுகள்”

இதையும் படிங்க: பஞ்சாப் தொட முடியாத இடத்தில் சாதனை.. கலக்கிய டாப் ஆர்டரின் ருத்ர தாண்டவம்.. ஹைதராபாத்தை வென்றது

“இப்போது எங்களுக்கு ஒரு நல்ல வேகம் கிடைத்திருக்கிறது. நாங்கள் அதை தொடர்ந்து எடுத்துச் செல்ல விரும்புகிறோம். எங்கள் எல்லோருக்கும் எல்லா திறமையும் இருப்பது நன்றாக தெரியும். எங்களுடைய பணி சார் ஒழுக்கம் சிறப்பாக இருக்கிறது. நாங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். முக்கியம் இதற்குதான் முன்னுரிமை தருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -