ஐபிஎல் 2025

2 விஷயங்களை தூக்கி குப்பையில போட்டுட்டேன்.. எனக்கு இந்த மாதிரி சந்தர்ப்பம்தான் வேணும் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 41 பந்தில் 87 ரன்கள் குவித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருது வென்றார். பிறகு இந்த போட்டி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நான் வீரர்களுக்கு சொல்வது இதுதான்

இந்த வெற்றி குறித்து பேசி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “நான் பேட்டிங் செய்யும்பொழுது அமைதியாக இருக்கிறேனா என எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை விரும்புகிறேன். நீங்கள் அமைதியாக இருந்தால் பெரிய பலன்களை பெறுவீர்கள் என நான் அணி வீரர்களிடம் சொல்லி வருகிறேன். இன்று அதற்கு ஒரு சரியான உதாரணமாக இருந்தேன். நான் என்னுடைய வியர்வையை விட என்னுடைய மூச்சில் கவனம் செலுத்தினேன்”

“200 ரன் இலக்கை துரத்தும் பொழுது ஆரம்பத்திலிருந்து நோக்கத்தை காட்ட வேண்டும். எங்கள் பேட்ஸ்மேன்கள் நல்ல நோக்கத்தை காட்டினார்கள். நான் உள்ளே வந்து சில பந்துகளை எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினார்கள். நான் எவ்வளவு நேரம் களத்தில் செலவிடுகிறேனோ அவ்வளவு சிறப்பாக விளையாடுவேன். எனக்கு பார்வையும் மிக நன்றாக மாறும்”

- Advertisement -

2 விஷயத்தை குப்பையில் போட்டுட்டேன்

“ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு கற்பனைகளையும் எங்களை சுற்றி விக்கல்களையும் தூக்கி குப்பையில் போட்டு விட்டேன். இந்த சீசன் முழுவதும் நாங்கள் நல்ல முறையில் விளையாடுகிறோம். ஒரு போட்டியின் தோற்றதால் நாங்கள் குறைவான அணியாக மாறிவிட மாட்டோம். நமக்கு முதல் போட்டியிலிருந்து நல்ல நோக்கமும் பாசிட்டிவான எண்ணம்தான் மிகவும் முக்கியமானது”

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் கிட்ட எதையுமே பண்ண முடியல.. இந்த 2 விஷயம் மாறி இருந்தா கதை வேறயா இருக்கும் – ஹர்திக் பாண்டியா பேச்சு

“அன் கேப்டு பிளேயர்களை அப்படியே விட்டு விடுகிறேன். அவர்களிடம் எதையும் பெரிதாக கேட்பதில்லை. அவர்கள் கொண்டுவரும் அச்சமற்ற தன்மை மற்றும் அவர்களுடைய யோசனைகள் எனக்கு பிடிக்கும். அவர்களிடம் அதிகம் அனுபவம் இல்லாவிட்டாலும் நியாயமான யோசனைகள் இருக்கும். அவர்களுக்கு துணிச்சலான இயல்பு இருக்கிறது. அணி நிர்வாகத்துடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அணியில் உள்ள அனைவருமே என்னை வசதியாக உணர வைத்து இருக்கிறார்கள். நாங்கள் சரியான தருணம் மற்றும் சூழலில் இருக்கிறோம். இதை நான் மதிக்கிறேன். எங்களின் வேலை பாதிதான் முடிந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by