போட்டிக்கு முன்பே வீரர்களிடம்.. இதுல கவனமா இருக்க சொன்னேன்.. சரியா அங்கதான் சிக்கி தோற்றோம் – சிஎஸ்கே கேப்டன்

0
605

தற்போது நடைபெற்ற முடிந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 4வது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தோல்வி அடைந்த விதம் குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

18 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். ஒரு கட்டத்தில் 85 ரன்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பஞ்சாப் அணியை ப்ரியன்ஸ் ஆர்யா மற்றும் சசாங்க் சிங் ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பின்னர் பெரிய இலக்கை நோக்கி சேச்சிங் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் ஓரளவு நன்றாக அமைந்த நிலையில் ரச்சின் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு சிவம் துபே மற்றும் கான்வெ ஜோடி ஓரளவு விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டாலும் மிடில் வரிசையில் அதிரடி ஷாட்கள் விளையாடாததால் இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோனி இறுதியில் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்தாலும் அது அணி வெற்றி பெறுவதற்கு போதுமானதாக இல்லை.

- Advertisement -

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன்

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கூறும் போது “கடந்த நான்கு ஆட்டங்களில் வித்தியாசத்தில் ஒரே புள்ளியாக எங்கள் பீல்டிங் மட்டுமே இருந்தது. இந்த போட்டியில் அதிக கேட்சுகள் கோட்டை விட்டோம். நீங்கள் கேட்ச் விட்டுக் கொடுத்த பேட்ஸ்மேன் 15,20,30 ரன்கள் எடுத்து வருகிறார். இந்த போட்டியில் பிரியான்ஸ் ஆர்யா நன்றாக சதம் அடித்து விளையாடினார். நீங்கள் அவரை பாராட்ட வேண்டும். அவரது அதிக ரிஸ்க் கொண்ட பேட்டிங் அவர்களுக்கு நல்ல விதமாக அமைந்தது. நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் அவர்கள் தங்களது வேகத்தை தொடர்ந்து கொண்டே இருந்தனர். 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க:0.98 மீட்டர்.. இடுப்புக்கு மேல் போயும் தோனிக்கு நோ பால் தராத நடுவர்.. ஐபிஎல் விதி சொல்வது என்ன.?

பேட்டிங் பார்வையில் இது ஒரு சரியான விஷயம் ஆகும். வேகத்தில் சிறப்பாக விளையாடும் எங்கள் இரண்டு பேட்ஸ்மேன்கள் பவர் பிளேவில் நல்ல தொடக்கத்தை கொண்டிருந்தனர். பேட்டிங் துறையில் இன்று நல்ல பாசிடிவ் விஷயங்கள் இருந்தன. இன்று நாங்கள் இரண்டு முதல் மூன்று ஹிட்கள் தொலைவில் இருந்தோம். டெவான் ஒரு பந்தை அடிக்க அதிக நேரம் எடுப்பவர். வரிசையில் முதலிடத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தார். ஜட்டு அவரது பங்கு இங்கு முற்றிலும் வேறுபட்டதாகும். பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும்போது கான்வே சரியான நேரத்தில் பார்முக்கு வந்தார். போட்டிக்கு முன்பு நான் பேசினேன், பீல்டிங்கில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று. பதட்டமாக இருந்தால் கேட்ச் வாய்ப்புகளை தவறவிடுவோம். நீங்கள் சிறந்த பீல்டராக தெரிந்தால் அணியை முக்கியமான நேரத்தில் காப்பாற்றுவீர்கள். ரன் அவுட் வாய்ப்புகளை பெறுவீர்கள். அது அணிக்கு நல்ல விஷயமாக இருக்கும். பேட்டிங் மற்றும் பந்து வீட்டில் கூட மோசமான நாட்கள் இருக்கலாம்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -