ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோலியுடன் சேர்ந்து ஆடிய வைரல் டான்ஸ் குறித்து புவ்னேஷ்வர் குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.
வெற்றி கொண்டாட்டத்தின் போது விராட் கோலி மற்றும் புவ்னேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து கிக்லி ஸ்டெப் நடனமாடினர். இந்த வீடியோவை கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நிலையில், அது இணையத்தில் வைரலானது.
இந்த கொண்டாட்டம் தவிர்த்து ஆர்சிபி டீம் சுற்றுச்சூழல் மிகவும் ஜாலியாக இருந்ததாகவும், மேட்ச் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாக வீடியோ கேம்ஸ் விளையாடும் பழக்கம் தங்களுக்குள் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புவ்னேஷ்வர் குமார் பேசும்போது “சீசன் முடிவடைந்ததும் எனக்கு எங்கே வலி இருக்கிறது என்று காட்டிக்கொண்டு இருந்தேன். அப்போது விராட் கூப்பிட்டு நாங்கள் டான்ஸ் ஆடத் தொடங்கினோம். காலை மேலே தூக்கும் ஐடியா என்னுடையதுதான். அவர் அதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக போட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் எனக்கு விஷயமே தெரியவந்தது. யாரோ ஒருவர் சொன்ன பிறகுதான் நான் அதைப் பார்த்தேன்” என்று கூறினார்.
மேலும் விராட் கோலி குறித்துப் பேசும்போது “விராட் கோலி எல்லாரைப் போலவும் மிமிக்ரி செய்வார். யாரை வேண்டுமானாலும் அவரால மிமிக்ரி செய்ய முடியும். அதில் அவருக்கு தனி கிளாஸ் இருக்கிறது. பேட்டிங்கை விட இதில் அவருக்கு அதிக டேலண்ட் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






