நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இறுதி வரை போராடிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் வெற்றிக்கான காரணம் குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப் சிம்ரன் சிங் அதிகபட்சமாக 15 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். பந்துவீச்சை பொறுத்தவரை கொல்கத்தா அணியின் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது. தொடக்க விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தாலும் மிடில் வரிசை பேட்மின்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க ரகானே 17 ரன்கள் அன்கிஷ் ரகுவன்ஷி 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஆனால் அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கொல்கத்தா அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் 95 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வரலாற்று பெற்றி பற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கூறும் போது “இந்த வெற்றியை வார்த்தைகளில் சொல்வது கடினம். நான் எனது உள் உணர்வை மட்டுமே நம்பினேன். பந்து கொஞ்சம் திரும்புவதை கண்டேன். முடிந்தவரை சஹாலிடம் சுவாசத்தை கட்டுப்படுத்தி பொறுமையாக இருக்குமாறு கூறினேன். நாங்கள் தாக்குதல் ஆட்டம் நடத்த வேண்டி இருந்தது. எங்கள் வீரர்கள் முடிந்தவரை சரியான இடத்தில் இருந்தார்கள். இப்போது இதுகுறித்து பேசுவது கடினம், இது போன்ற வெற்றிகள் விஷயங்களை சிறப்புற செய்கின்றன. நான் பேட்டிங் செய்ய சென்றபோது இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்த போது ஸ்வீப் செய்வது கடினம் என்று உணர்ந்து கொண்டேன். ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் இருந்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை பார்க்கும்போது இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:மோசமான தோல்விக்கு முழு காரணம் நான்தான்.. இக்கட்டான நேரத்தில் அந்தத் தப்பை செஞ்சிருக்க கூடாது – கேகேஆர் கேப்டன் பேட்டி
இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் சீராக இல்லை. இதை நான் பந்துவீச்சாளர்களிடம் சொல்லி அதற்கு தகுந்தவாறு செயல்படுமாறு கூறினேன். அவர்களும் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். சகால் இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். பந்து நன்றாக திரும்புவதை பார்க்கும்போது சஹால் நன்றாக செயல்படுவார் என்று தெரியும். அவர் நல்ல நிலையில் இருந்த போது எங்களது நம்பிக்கை உயர்ந்தது. அவர்கள் தவறுகளை செய்வார்கள் எனவே அலை நம்மை நோக்கி திரும்பும் இன்று வாய்ப்புக்காக காத்திருந்தோம். இந்த வெற்றியால் அடக்கமாக இருப்பது மிகவும் முக்கியம். இந்த ஆட்டத்தில் அனைத்து நேர்மறைகளையும் எடுத்துக்கொண்டு அடுத்த போட்டியின் முதல் பந்தில் இருந்து சிறப்பாக செயல்படுவது அவசியம்” என்ற பேசியிருக்கிறார்.