மோசமான தோல்விக்கு முழு காரணம் நான்தான்.. இக்கட்டான நேரத்தில் அந்தத் தப்பை செஞ்சிருக்க கூடாது – கேகேஆர் கேப்டன் பேட்டி

0
342

தற்போது நடைபெற்று முடிந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்த விதம் குறித்து கொல்கத்தா கேப்டன் அஜின்கியா ரகானே சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா அணி தோல்வி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லான்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்கம் ஓரளவு நன்றாக அமைந்தாலும் அதற்கு பின்னர் விளையாடிய வீரர்கள் அனைவருமே மிக விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப் சிம்ரன் சிங் 15 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது. பந்துக்கு பந்து 1 ரன் எடுத்திருந்தாலே வெற்றி பெற்று இருக்க வேண்டிய இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

தோல்விக்கு காரணம் நான் தான்

இந்த போட்டியின் தோல்விக்கான காரணம் குறித்து கேகேஆர் கேப்டன் ரகானே கூறும்போது ” தோல்வி குறித்து நான் ஒன்றும் விளக்க விரும்பவில்லை. அங்கே என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். நாங்கள் செய்த முயற்சியில் ஏமாற்றம் அடைந்தேன். தோல்விக்கு முழு பொறுப்பு நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் ஒரு கேப்டனாக நான் நன்றாக விளையாடி இருக்க வேண்டும். நான் அப்போது தவறான ஷாட் விளையாடி வெளியேறினேன். அது இறுதியில் அவுட் இல்லை என்றாலும் என்னோடு விளையாடிய பார்ட்னர் ரகுவன்சிக்கு அவ்வளவாக தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் ஒரு வாய்ப்பை வீணடிக்க விரும்பாததால் அவுட் குறித்து எதையும் மேல்முறையீடு செய்யாமல் வெளியேறி விட்டேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறோம்.

இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. 17 வருட சிஎஸ்கே சாதனையை முறியடித்த பஞ்சாப் அணி.. கொல்கத்தாவை வீழ்த்தி தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்

நாங்கள் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். நாங்கள் இந்த போட்டியில் பொறுப்பற்றவர்களாக விளையாடினோம். தோல்விக்கு நாங்கள் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் என் தலையில் நிறைய விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே இதுகுறித்து இனி எதற்கும் கவலைப்படாமல் அடுத்த போட்டிகளில் எப்படி சிறப்பாக செயல்படுவது என்று முன்னேற வேண்டும்” என்று கூறி இருக்கிறார். கேப்டன் ரகானே 17 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த போது சஹாலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் மேல் முறையீடு செய்திருந்தால் நாட் அவுட் ஆகி கொல்கத்தா வெற்றி பெற இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருப்பார் என்று நம்பி இருக்கலாம்

- Advertisement -