இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் காயமடைந்த ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருடைய இடத்தில் குயிண்டன் டி காக் இடம்பெற்றார்.
குயிண்டன் அதிரடி சதம்
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன் அணிக்கு தொடக்க ஆட்டக்கார குயிண்டன் டி காக் சிறப்பாக விளையாடி இறுதி வரை களத்தில் நின்று சதம் அடித்து 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டிக்கு பேட்டிக்கு வரிசையில் நான்காவது இடத்தில் வந்த இளம் வீரர் நமன் திர் 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 50 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் சிங் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
ஸ்ரேயாஸ் சாதனை
இதைத் தொடர்ந்து விளையாடி பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் இறுதிவரை களத்தில் இருந்து அரைசதம் அடித்து 39 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் குவித்தார். இன்னொரு முனையில் அதிரடி காட்டிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் நான்கு சித்தர்கள் உடன் 66 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 17 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : எனக்கு பும்ரா மாதிரி திறமை கிடையாது.. அதனால இத வச்சு தான் ஈடு கட்டுறேன்.. என் திட்டம் இதுதான் – ஹேசில்வுட் கருத்து
2025 ஐபிஎல் தொடர் முதல் இதுவரை இல்லை வெற்றிகரமாக இலக்கை துரத்தியதில் விராட் கோலி ஆறு முறை அரை சதம் அடித்திருந்தார். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையை சமன் செய்து இருக்கிறார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை அடித்திருக்கிறார்.






