நேற்று லக்னா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அபார பந்துவீச்சின் மூலம் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார்.
மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு மிக முக்கிய காரணமாக ஜோஸ் ஹேசில்வுட் இருந்தார். இந்த ஆண்டும் அவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு கடினமாக இருந்தது
இதுகுறித்து ஜோஸ் ஹேசில்வுட் பேசும்பொழுது ” கடந்த ஆண்டு முதல் பாதியில் நாங்கள் பெங்களூரில் விளையாடிய போட்டிகள் எங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. இதனால் நாங்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீசியது நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது. இந்த ஆடுகளம் வழக்கமாக ஆடுவதில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பந்து கொஞ்சம் மெதுவாக வந்ததுடன் பவுன்ஸ் ஏற்றத்தாழ்வு இருந்தது”
” அதே சமயம் நாங்கள் இலக்கை விரட்டிப் பிடித்த வேகம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. அப்படி இருக்கும்போது ஐந்து ஓவர்கள் மீதம் வைத்து வெல்வது சிறப்பான விஷயம்”
பும்ரா போல திறமை இல்லை
“நேற்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் முதல் ஓவரிலேயே ஆடுகளத்தை கவனித்துவிட்டார். அவர்தான் இந்த ஆடுகளத்திற்கு சரியான லென்த்தை எங்களுக்கு காட்டினார். கடந்த ஆண்டு முதல் அவர் இந்த வேலையை எங்களுக்கு மிகவும் நுட்பமாக செய்து கொண்டு வருகிறார்”
இதையும் படிங்க : 14 பந்துக்கு 9 ரன்.. விராட் கோலி செட் ஆயிட்டு மோசமா ஆடறார்.. பிரச்சனைக்கு காரணம் இதுதான் – இர்பான் பதான் கருத்து
“பும்ரா போல எனக்கு மெதுவான பந்து வீசும் திறமை கிடையாது. இதனால் நான் பந்து வீச ஓடிவரும் ஓட்டத்தை வைத்து இதை சமன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. பயிற்சியில் சில விஷயங்களை எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்பேன். அவற்றை தேவையான நேரத்தில் போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.






