454 நாட்கள் திரும்பிய ரிஷப் பண்ட்.. சாம் கரன் அதிரடியில் டெல்லி கேப்பிடல்சை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது

0
167
Sam

ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி, பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய மைதானத்தில் இன்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடியாக இந்திய துவக்க ஆட்டக்காரர் பிருத்திவி ஷா நீக்கப்பட்டார். வார்னர் மற்றும் மார்ஸ் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக அதிரடியான ஆட்டத்தில் வெளிப்படுத்தினார்கள். மார்ஸ் 20(12), வார்னர் 21(29), ஷாய் ஹோப் 33 (25), ரிஷப் பண்ட் 18(13), ஸ்டப்ஸ் 5(8), ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

கீழ் வரிசையில் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ரிக்கி புய் 3(7), சுமித் குமார் 2(9) ரன்கள் என ஏமாற்றம் அளித்தார்கள். இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயராக பந்துவீச்சாளரை கொண்டு வர இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரங்கள் இல்லாத காரணத்தினால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அபிஷேக் போரலை கொண்டு வந்தது. அதிரடியாக விளையாடிய அவர் ஹர்சல் படேலின் இருபதாவது ஓவரில் 25 ரன்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 10 பந்தில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 32 ரன்கள் அடித்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் அர்ஸ்தீப் சிங் 4 ஓவர்களுக்கு 28 ரன்கள் தந்த, 2 விக்கெட். ஹர்சல் படேல் 4 ஓவர்களுக்கு, 47 ரன்கள் தந்து, 2 விக்கெட் கைப்பற்றினார்.

சாம் கரன் அதிரடி

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாபின் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 22(16), ஜானி பேர்ஸ்டோ 9(3), பிரப்சிம்ரன் சிங் 26(17), ஜிதேஷ் சர்மா 9(9) ரன்களில் வெளியேற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டத. இந்த நிலையில் இங்கிலாந்து ஜோடியான சாம் கரன் நான்காவது வீரராக வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்னொரு முனையில் அவருடன் இணைந்து லிவிங்ஸ்டன் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய சாம் கரன் 47 பந்தில் 6 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உடன் 63ர ன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கு அடுத்து வந்த சஷாங்க் சிங் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இதனால் 8 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பரித் பிரார் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை டேவிட் வார்னர் தவறவிட இரண்டு ரன்கள் கிடைத்தது.

இதையும் படிங்க : 4,6,4,4,6,1.. ஹர்சல் படேல் 20வது ஓவர் ஜடேஜா போல் நொறுக்கிய அபிஷேக் போரல்.. யார் இவர்?

கடைசி ஓவரில் ஆறு பந்துக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளை சுமித்குமார் வைடாக வீசினார். இதற்கு அடுத்து லியாம் லிவிங்ஸ்டன் சிக்ஸர் அடித்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்து, 31 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களுக்கு 20 ரன்கள் தந்து, 2 விக்கெட் கைப்பற்றினார். பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 17வது சீசனை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறது.