பஞ்சாப் 143 ; ஷிகர் தவான் 99* ; ஒன் மேன் ஷோ காட்டிய பஞ்சாப் கேப்டன்!

0
312
Shikardhawan

ஐபிஎல் பதினாறாவது சீசனின் டபுள் ஹெட்டர் நாளில் இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசை முதலில் வென்று ஹைதராபாத் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. புவனேஸ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் பிரப்சிம்ரன் ஆட்டம் இழந்து வெளியேறினார். பவர் பிளேவில் மேற்கொண்டு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜித்தேஷ் சர்மா விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

- Advertisement -

இதற்கு அடுத்து கொஞ்சம் மேலே அனுப்பப்பட்ட சாம் கரன் 15 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சிக்கந்தர் ராஸா ஐந்து ரன்கள், ஷாருக்கான் நான்கு ரன்கள், ஹர்பரித் ஒரு ரன், ராகுல் சகர் பூஜ்ஜியம், நாதன் எல்லீஸ் பூஜ்ஜியம் என எடுத்து வெளியேற, பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்து மிகப்பெரிய நெருக்கடியில் இருந்தது.

இதற்கு அடுத்து கடைசி விக்கெட் ரத்தியை வைத்துக்கொண்டு கேப்டன் ஷிகர் தவான் ஒரு அபாரமான இன்னிங்ஸை விளையாடினார். அடுத்த ஐந்து ஓவர்களில் 55 ரன்கள் கடைசி விக்கட்டின் பார்ட்னர்ஷிப்பாக வந்தது. கடைசி ஓவரின் போது 91 ரன்கள் குவித்திருந்த ஷிகர் தவான், நடராஜன் வீசிய கடைசி ஓவரில் இரண்டு ரன் மற்றும் ஒரு சிக்ஸர் மட்டுமே எடுத்தார், இதன் மூலம் 99 ரன்களில் ஆட்டம் இழக்காமல் நின்றார். விக்கெட்டுகள் ஏதாவது இருந்திருந்தால் அவர் இன்னும் ரன்களுக்கு போயிருப்பார் மேலும் சதத்தையும் எட்டி இருப்பார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் முடிவில் பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 66 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 99 ரன்கள் குவித்தார். மேலும் சென்னை வீரர் ருதுராஜிடம் இருந்து அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று, அணியின் போரில் ஏறக்குறைய 70 சதவீதத்திற்கு மேலான ரன்னை கேப்டன் ஷிகர் தவான் எடுத்து இருக்கிறார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மயங்கி மார்க்கண்டே நான்கு ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் சரிவுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தார். மேலும் புதிய பந்தில் யான்சன் மூன்று ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இன்று முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து சிக்ஸ்ர் 5 பந்தில் அடித்து ஆட்டத்தை வென்றார். இரண்டாவது ஆட்டத்தில் ஷிகர் தவான் தனியாக நின்று அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.