“புஜாராவின் போராட்டம் வீண் நேத்தன் லியான் சுழலில் சிக்கிய இந்தியா…
163 ரன்களுக்கு பொட்டலமானது…. ஆஸ்திரேலியா அணிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்கு!

0
449

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா இன்று காலை முதல் செசனில் 197 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறியது. கில் 5 ரன்களிலும் ரோகித் சர்மா 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விராட் கோலி 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ரவீந்திர ஜடேஜா 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

புஜாரா உடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் 27 ரன்களில் உஸ்மான் கவஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை பேட்டிங்கில் காப்பாற்றிய அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 16 ரண்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். அரை சதத்தை கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா லியோன் பந்துவீச்சில் 59 ரண்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அக்சர் பட்டேல் இறுதிவரை ஆட்டம் விளக்காமல் 15 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் நேதன் லியான் மிகச் சிறப்பாக பந்து வீசி 64 ரன்களை விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றிய குன்னமென் ஒரு விக்கெட்டையும் ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆட்டமிழந்ததை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 76 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருப்பதால் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்று இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைதானம் பந்துவீச்சிக்கு சாதகமாக இருப்பதால் இந்தியா கடுமையாக போராடி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முயற்சி செய்யும். இந்த டெஸ்ட் போட்டியும் மூன்றாம் நாளிலேயே முடிவுக்கு வரும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.

- Advertisement -