இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் புஜாரா இரட்டைச் சதம் ! 118 வருடங்களுக்குப் பின் புதிய சாதனை – வீடியோ இணைப்பு

0
240
Pujara

34 வயதான செளராஷ்ட்ர பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாரா, இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெறும், டெஸ்ட் போட்டி சிறப்பு பேட்ஸ்மேனாக இருப்பவர். எதிரணி வீரர்கள் இந்திய அணியிடம் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்பதை விட, புஜாரா களத்தில் நிற்பதைத்தான் அதிகம் விரும்ப மாட்டார்கள். உறுதியான தடுப்பு யுக்திகளை பேட்டிங்கில் கொண்ட புஜாரா, களத்தில் அசராமல் நின்று, எதிரணி பவுலர்களை களைப்படைய செய்வதில் ஆரம்பித்து, எதிரணி கேப்டன், வீரர்கள் என ஒட்டுமொத்த எதிரணியையும் மெல்ல மெல்ல நம்பிக்கை இழக்க வைத்துவிடுவார்!

கடந்து ஆண்டின் இறுதியில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொஞாரில் விளையாட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தது. அந்தத் தொடரில் புஜாரா, ரகானேவின் பேட்டிங் செயல்பாடு மோசமாக அமைந்தது. அதற்கு முந்தைய தொடர்களிலும் பெரிதாய் குறிப்பிடும்படி அமையவில்லை. இதனால் இந்த ஆண்டு உள்நாட்டில் நடந்த இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடவில்லை!

- Advertisement -

இவர்கள் இருவரையும் அந்தச் சமயத்தில் துவங்கிய ரஞ்சி சீசனில் விளையாட பி.சி.சி.ஐ கேட்டுக்கொள்ள இருவரும் முதல் சீசன் ரஞ்சி போட்டிகளில் விளையாடினார்கள். பின்பு ஐ.பி.எல் தொடர் குறுக்கே வர ரகானே கொல்கத்தா அணிக்குத் தேர்வானார். புஜாரா இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் விளையாட சசக்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி விளையாடச் சென்றார். அங்கு கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் சசக்ஸ் அணிக்காக சதங்களையும், இரட்டை சதங்களையும் கொட்ட ஆரம்பித்தார்!

இதனால் கடந்த மாதம் இங்கிலாந்திற்குச் சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்றார். முதல் இன்னிங்ஸில் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும் இரண்டாம் இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்தார். மீண்டும் இங்கிலாந்தில் சசக்ஸ் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்!

- Advertisement -

இந்த நிலையில் சசக்ஸ் அணிக்கு முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற புஜாரா, மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், முதல் நாளின் முடிவில் நேற்று முன்தினம் 115 ரன்கள் அடித்திருந்தார். நேற்று தொடர்ந்து ஆடிய அவர் 231 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் 21 பவுண்டரிகள் அடக்கம்.

புஜாரா தனது கடைசி பத்து இன்னிங்ஸில் சசக்ஸ் அணிக்காக ஐந்து முறை நூறு ரன்களை தாண்டி இருக்கிறார். இது அவருக்கு மூன்றாவது இரட்டை சதமாகும். சசக்ஸ் அணி முதல் இன்னிங்ஸிர் 523 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கவுன்டி அணியான சசக்ஸ் அணிக்காக 118 வருட கவுன்டி கிரிக்கெட் வரலாற்றில், ஒரே சீசனில் மூன்று இரட்டை சதம் அடித்தவர் புஜாராதான்!

- Advertisement -